ரஜினி Vs விஜய் சூப்பர் ஸ்டார் மோதல்.; எரியுற தீயில் எண்ணெய் ஊற்றும் விஜய் ஸ்ரீஜி

ரஜினி Vs விஜய் சூப்பர் ஸ்டார் மோதல்.; எரியுற தீயில் எண்ணெய் ஊற்றும் விஜய் ஸ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? யார் நம்பர் ஒன்? முன்னாள் சூப்பர் ஸ்டார்? என்ற பல விதமான பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நம்பர் ஒன் விஜய் என்று பேசினார் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு. மேலும் வாரிசு இசை விழாவில் விஜய் சூப்பர் ஸ்டார் என்றும் பேசினார்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது ‘ஹரா’ படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று ஜனவரி 5.. மூத்த நடிகர் சாருஹாசனின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு ‘ஹரா’ படத்தில் அவர் நடித்து வரும் காட்சிகளை பதிட்டு வாழ்த்தியுள்ளார்.

அந்த வீடியோவில் வயதான சூப்பர் ஸ்டார் சாருஹாசனுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

ஏற்கனவே யார் சூப்பர் ஸ்டார் என்ற ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வயதான சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை விஜய்ஸ்ரீ ஜி பயன்படுத்தி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Rajini Vs Vijay Superstar Clash.; Vijay Sriji adds fuel to the burning fire

Happy Birthday
Don #Charuhasan ?

Audio from February 14th

#HARAA?❤️‍?

#Mohan @khushsundar @iYogiBabu #Charuhasan #MottaiRajendran #SingamPuli @manobalam @vijaysrig #SPMohanraja @onlynikil

யோகிபாபு நடித்த ‘பொம்மை நாயகி’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட பா. ரஞ்சித்

யோகிபாபு நடித்த ‘பொம்மை நாயகி’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட பா. ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.

இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார்.

ஒரு தந்தையை (யோகிபாபு) மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாம்.

இந்த படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிறுமி ஸ்ரீமதியுடன் யோகிபாபு கடலருகே நின்றுகொண்டு கைகாட்டும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்தது.

இதன் ட்ரைலர் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தை வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Get ready for #BommaiNayagi will be releasing in Cinemas 3️⃣.2️⃣.2️⃣3️⃣

#BommaiNayagiFromFeb3

@beemji @iYogiBabu @officialneelam @YaazhiFilms_ @vigsun @Manojjahson @shan_shanrise @athisayam_rajj @SundaramurthyKS @EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu @STUNNER_SAM @pro_guna

@thehari___ @Actor_ArulDass @gmkhighness @imjayachandran1 @Lizzieantony @Jayaraguart @anthoruban @psaravanan056 @r_stills @aegan_ekambaram @rustictales @naanVPR @syamlal_ts @ZeeTamil @StarviewDigital @kabilanchelliah @thinkmusicindia

Yogi Babu’s Bommai Nayagi release date announced

துணிவை துரத்தி வந்த ‘வாரிசு’.; அயோக்கிய பயலுடன் ஆட்ட நாயகன் மோதல்

துணிவை துரத்தி வந்த ‘வாரிசு’.; அயோக்கிய பயலுடன் ஆட்ட நாயகன் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஆனாலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.

நேறு மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியானது.

இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.

‘துணிவு’ படத்தை ஜனவரி 11ஆம் தேதி வெளியிட உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

எனவே வாரிசு படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது ஆனால் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாரிசு பணத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி விஜய்யின் வாரிசு படமும் இதே நாளில் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ பட ட்ரெய்லரில் நான் ஒரு அயோக்கிய பய என்று கூறி இருப்பார் அஜித்.. ‘வாரிசு’ பட ட்ரைலரில் நான்தான் ஆட்ட நாயகன் என்று கூறியிருப்பார் விஜய்.

தற்போது ஆட்டநாயகன் & அயோக்கிய பயலும் மோத உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

கூடுதல் தகவல்…

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை அமைச்சர் உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதே நிறுவனம்தான் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டு உரிமையை சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் மட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thunivu and Varisu will release on same day

திரைத்துறை கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றம் – தமிழக அமைச்சர் உறுதி

திரைத்துறை கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றம் – தமிழக அமைச்சர் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

EV கணேஷ்பாபு இயக்கி தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.

இதன் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பேசியதாவது…

மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலை சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென வாழ்த்துகிறேன். மாண்புமிகு கலைஞர் அய்யா அவர்கள் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்து விளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

TN Govt will fulfill Tamil Cinema Industry request says minister

அன்போ அடியோ எனக்கு யோசிச்சு கொடுக்கனும்..; ‘வாரிசு’ ட்ரைலரில் விஜய் பன்ச்

அன்போ அடியோ எனக்கு யோசிச்சு கொடுக்கனும்..; ‘வாரிசு’ ட்ரைலரில் விஜய் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று 2023 ஜனவரி 4ல் மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ ட்ரைலர் வெளியானது..

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2 நிமிடம் 28 செகண்டுக்கான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுக்குடும்பத்திற்கு வரும் சிக்கல் அதை குடும்பத்தின் கடைசி மகன் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை.

இதில் வில்லன் ரோலில் பிரகாஷ்ராஜ் நடிக்க விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்துள்ளனர்.

விஜய்க்கு அம்மாவாக ஜெயசுதா நடிக்க இரு அண்ணன்களாக ஷாம் மற்றும் தெலுங்கு ஸ்ரீகாந்த் நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சுமன் யோகி பாபு குஷ்பூ பிரபுவஉள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் விஜய்யின் அதிரடியான பன்ச் வசனங்களும் நடனங்களும் ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்துள்ளன.

பன்ச் டயலாக்ஸ் இதோ…

மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கணும்”

எல்லா இடமும் நம்ம இடம் தான்’

“கிரவுண்ட் மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம் – ஆனா

ஆடியன்ஸ் ஒருத்தன மட்டும் தான் பாப்பாங்க!” அவன்தான் தான் ஆட்ட நாயகன்

பவர் சீட்ல இருக்காது.. அதுல வந்து ஒருத்தன் உட்காருவான்ல..்அவன்கிட்ட…!

Here’s Varisu – Official Trailer ❤‍?

Varisu – Official Trailer

See ‘U’ soon nanba ? l #filmistreet

#VarisuGetsCleanU
#VarisuPongal
#VarisuTrailer

#Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman https://t.co/sD6oW2UT

#SilambarasanTR | #TheeThalapathy | #Varisu | #Vijay

#VarisuSecondSingle
#30YearsOfVijayism l #filmistreet
#VarisuPongal #Varisu

Vijay punch dialogue in varisu trailer goes viral

தமிழ் பாரம்பரியத்தை ‘கட்டில்’ எடுத்துக்காட்டும்.. – சிருஷ்டி டாங்கே

தமிழ் பாரம்பரியத்தை ‘கட்டில்’ எடுத்துக்காட்டும்.. – சிருஷ்டி டாங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

EV கணேஷ்பாபு இயக்கி தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’.

இதன் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகை சிருஷ்டி டாங்கே பேசியதாவது…

‘கட்டில்’ படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப் படம் எடுத்துக்காட்டும். இந்தப்படத்தை நான் மிகவும் நம்புகிறேன். இந்தப் பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென நம்புகிறேன்.

இ.வி.கணேஷ்பாபு சார், லெனின் சார், ஶ்ரீகாந்த்தேவா சார், வைட் ஆங்கிள் ரவிசங்கரன் சார் இவர்கள் நால்வரும் தான் படம் சிறப்பாக வரக்காரணம். அவர்களுக்கு மிகவும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

Kattil will shows Tamil Culture says Shrusti Dance

More Articles
Follows