தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..; சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி பேச்சு

Rajinikanth at IFFIகோவாவில் தொடங்கிய 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் கலைச் சேவையை பாராட்டி அவருக்கு ‛கோல்டன் ஐகான் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த விருதை சில நாட்களுக்கு முன்ர் அறிவித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சன் நேற்று ரஜினிக்கு கோவாவில் வழங்கினார்.

விருதை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில்,

‛‛இந்த விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இதை அளித்த இந்திய அரசிற்கு நன்றி. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என பேசினார்.

Overall Rating : Not available

Latest Post