தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேசிய விருதைப் போன்று ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒவ்வொரு ஆண்டிற்கான திரைத்துறை விருதுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாத நிலையில், மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி – சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட உள்ள விருதுகள் பட்டியலை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.
அதில் 2014ஆம் ஆண்டிற்கான என்.டி.ஆர் விருதை கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டிற்கான விருதை ரஜினிகாந்துக்கும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கு கமல் அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கமலுக்கு நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினி.
மேலும் மற்றொரு பதிவில் நந்தி விருதுக்கு தம்மை தோ்வு செய்தமைக்காக நன்றி என பதிவிட்டுள்ளார்.
Rajini said thanks to Kamalhassan and Andhra Govt for Nandi Awards
RajinikanthVerified account @superstarrajini
I convey my heartfelt thanks and happiness for the prestigious #NandiAwards granted to me