லைஃப்ல எல்லாமே கொஞ்சமாக செய்யுங்க.; ஹைதராபாத்தில் ரஜினி பேச்சு

லைஃப்ல எல்லாமே கொஞ்சமாக செய்யுங்க.; ஹைதராபாத்தில் ரஜினி பேச்சு

Rajini mass speech at Darbar Pre release event at Hyderabad முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உலகமெங்கும் வெளியிட உள்ளனர்.

எனவே இதன் புரோமோசனில் தீவிர கவனம் செலுத்து வருகிறது படத்தயாரிப்பு நிறுவனமான லைகா.

இந்த நிலையில் இதன் தெலுங்கு பதிப்பு புரோமோசனுக்கு (PRE RELEASE EVENT) ரஜினி, முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…

”நீங்கள் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். அது… கொஞ்சமாக ஆசைப்படுங்கள்,, கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிட்டுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இவ்வாறு இருந்தாலே சுறுசுறுப்பாக சந்தோசமாக இருக்கலாம்”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

மேலும் பாகுபலிக்கு நிகராக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Rajini mass speech at Darbar Pre release event at Hyderabad

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *