‘சிகரெட்-தண்ணி அடிக்காதே…’ ரஜினிக்கு சிவகுமார் அட்வைஸ்

‘சிகரெட்-தண்ணி அடிக்காதே…’ ரஜினிக்கு சிவகுமார் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth sivakumarதிரை உலகைத் தாண்டியும் அனைவரிடமும் நல்ல மனிதர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார்.

இவர் அண்மையில் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்தும் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்….

“நான் சிவக்குமாருடன் புவனா ஒரு கேள்விக்குறி மற்றும் கவிக்குயில் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.

அவருடைய பழகிய நாட்களை மறக்க முடியாது.

அப்போது புகை மற்றும் மது பழக்கங்களுக்கு நான் அடிமையாக இருந்த நேரம்.

அப்போதெல்லாம் ரஜினி நீ பெரிய நடிகனா வருவ. இந்த பழக்கத்தால உன் உடம்பை கெடுத்துக்காதே என்பார்.

என்னடா இந்த ஆளு, நிம்மதியா இருக்க விடமாட்டுறாரு. அப்படின்னு சில சமயங்களில சலிப்பா இருக்கும்.

அவர் நல்ல மனிதர். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் சொன்னது பலித்தது.

நான் பெரிய நடிகன் ஆனேன். அவர் பேச்சை கேட்காததினால் என் உடம்பை கெடுத்து கொண்டேன்.

இன்னைக்கு அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை.

அவர் சொல்கிறபடி நடந்துகிட்டா ஆரோக்யமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்.

இந்த மாபெரும் கலைஞன் நீடுழி வாழ ஆண்டவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.”

என்று இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளார்.

rajin letter to sivakumar for his 75th birthday

அஜித்-விஜய்-சூர்யா கொடுத்ததை தனுஷ்-கார்த்தி கொடுப்பார்களா.?

அஜித்-விஜய்-சூர்யா கொடுத்ததை தனுஷ்-கார்த்தி கொடுப்பார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith suriyaதீபாவளி என்றாலே பட்டாசு, பலகாரம், புதிய ஆடைகளுடன் நம் நினைவில் வருவது புதிய படங்களின் ரிலீஸ் செய்தியே.

போன வருஷம் அந்தப் படம் வந்துச்சி, இந்தப் படம் இப்போ வந்துச்சி என ஒவ்வொரு தீபாவளியுடன் டாப் ஸ்டார்களை படங்களை ஒப்பீடு செய்து பேசி வருவதை பார்த்திருப்போம்.

எனவே நாமும் அதுபோன்ற ஒரு ஒப்பீட்டை இப்போது பார்ப்போமா..?

அஜித் நடிப்பில் உருவான ‘வரலாறு” (2006), ‘ஏகன்’ (2008), ஆரம்பம் (2013), மற்றும் வேதாளம் (2015) ஆகிய 4 படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்த்து.

இதில் ‘ஏகன்’ தவிர மற்ற மூன்று படங்களும் ஹிட் அடித்தன.

விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் (2007), வேலாயுதம் (2011), துப்பாக்கி (2012) மற்றும் கத்தி (2014) ஆகிய 4 படங்கள் தீபாவளிக்கு வெளியானது.

இதில் அழகிய தமிழ் மகன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மற்றவை ஹிட் அடித்தன.

இதே போன்று சூர்யா நடிப்பில் ‘வேல்’ (2007), ஆதவன் (2009) மற்றும் ஏழாம் அறிவு (2011) ஆகிய 3 படங்கள் வெளியாகியது.

இதில் ஏழாம் அறிவு படம் போதி தர்மர் பற்றிய சர்ச்சைகளை எழுப்பியது.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு தனுஷின் கொடி படம் வெளியானது.

இதற்கு முன்பு, ‘பொல்லாதவன்’ (2007) ‘உத்தமபுத்திரன்’ (2010) வெளியானது.

தற்போது கொடியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இவை ஹிட் லிஸ்ட்டில் இணையும்.

கடந்த 2013 தீபாவளிக்கு கார்த்தியின் அழகுராஜா வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

எனவே இந்தாண்டு வெளியான காஷ்மோரா அவரது முதல் தீபாவளி ஹிட்டாக அமையும் என சொல்லப்படுகிறது.

கட்சியில் இணைகிறாரா கௌதமி.? மோடியை சந்தித்தது ஏன்.?

கட்சியில் இணைகிறாரா கௌதமி.? மோடியை சந்தித்தது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prime minister modi gautami meetபாரத பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்தார் நடிகை கௌதமி.

அதன்பின்னர் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்தார்.

இதனால் அவர் மீண்டும் பா.ஜ.கட்சியில் இணையப் போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கௌதமி விளக்கம் அளித்துள்ளார். அதில்….

“லைப் அகெய்ன்’ (LIFE AGAIN) எனும் புற்று நோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்க உள்ளேன்.

இது குறித்து பேசவும் வாழ்த்து பெறவும் பிரதமரை சந்தித்தேன். அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.

எனக்கு எந்த எல்லைகளும் இல்லை. எனது மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார் கௌதமி.

விஜய்யை மாற்றிய கீர்த்தி… சிவகார்த்திகேயன் ட்ரெய்னிங்கா?

விஜய்யை மாற்றிய கீர்த்தி… சிவகார்த்திகேயன் ட்ரெய்னிங்கா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshவிஜய்யுடன் முதன்முறையாக பைரவா படத்தில் இணைந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

படத்தில் ஆக்ஷன், அனல் பறக்கும் பன்ச், செம டான்ஸ் என விஜய் அசத்தினாலும், அவர் சூட்டிங் ஸ்பாட்டில் மிக அமைதி என பலர் கூறக் கேட்டிருப்பதை அறிந்திருப்போம்.

ஆனால் பைரவா சூட்டிங்கில் அமைதியுடன் இருக்கும் விஜய்யிடம் அடிக்கடி கீர்த்தி ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாராம்.

இதன்பின்னர் விஜய்யும் நன்றாக கலகலப்புடன் பேச ஆரம்பித்துவிட்டாராம்.

இதைப் பார்த்த சிலர், அட இந்த பொண்ணு, விஜய்யே இப்படி மாத்திடுச்சே. செம ஆளுதான். ஒரு வேளை சிவகார்த்திகேயன் ட்ரெய்னிங்கா இருக்குமோ? என்று பேசி கொள்கிறார்களாம்.

சிவகார்த்திகேயன், தன் சூட்டிங் ஸ்பாட்டில் மிகுந்த ஜாலியாக இருப்பதும், அவருடன் கீர்த்தி சுரேஷ் இரு படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக ரிலீஸ் தேதியை முடிவு செய்த சிம்பு

ஒருவழியாக ரிலீஸ் தேதியை முடிவு செய்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Acham Enbathu Madamaiyada release date confirmedவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்க, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.

ஏஆர் ரஹ்மான் இசையைமைக்க, மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

இடையில் சில பிரச்சினைகள் எழுந்த நிலையில் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

ஆனால் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, படத்தை நன்றாக முடித்து, தற்போது ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளனர்.

எனவே திட்டமிட்டப்படி நவம்பர் 11ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

கொடி-காஷ்மோரா வசூல் எவ்வளவு? யார் முன்னிலை?

கொடி-காஷ்மோரா வசூல் எவ்வளவு? யார் முன்னிலை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush karthiதீபாவளி விருந்தாக தனுஷின் கொடி மற்றும் கார்த்தி நடித்த காஷ்மோரா படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.

இவை இரண்டும் தமிழ்நாட்டில் தனித் தனியே சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

மேலும் இரண்டு படங்களும் தெலுங்கிலும் வெளியானது.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக கொடி படம் சுமார் 5 கோடி ரூபாய் வரையிலும், காஷ்மோரா படம் 6 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொடி முன்னிலையிலும் மற்றவைகளில் காஷ்மோரா முன்னிலை வகிக்கிறதாம்.

More Articles
Follows