JUST IN PS1 விழாவுக்கு ரஜினி – கமல் வந்தாங்க.; விமல் வர மாட்டாரா.? அமீர் ஆவேசம்

JUST IN PS1 விழாவுக்கு ரஜினி – கமல் வந்தாங்க.; விமல் வர மாட்டாரா.? அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல காமெடி நடிகர் குணச்சித்திர நடிகர் என பெயர் பெற்றவர் சரவணசக்தி. இவர் தனது சினிமா பயணத்தை இயக்குனராக தொடங்கினாலும் நடிகராக பிரபலம் அடைந்தார்.

தற்போது இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ள படம் ‘குலசாமி’.

இதில் விமல் மற்றும் தன்யா ஹோப் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் அவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமீர்

இந்த விழாவில் இறுதியாக அமீர் பேசும்போது..

“உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நான் சரவணன் சக்தி இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்து வருகின்றோம்.

இந்த படத்தின் சூட்டிங் மிகவும் கலகலப்பாக சென்றது. சரவணன் சக்தி ஒரு சிறந்த கதை சொல்லி ஆவார்

அவர் இயக்கியுள்ள இந்த ‘குலசாமி’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படத்தின் விழாவிற்கு நாயகன் விமல் மற்றும் நாயகி வந்திருக்க வேண்டும்.

அவர்கள் மற்ற காரணங்களை தவிர்த்து கண்டிப்பாக இந்த படத்தில் விழாவிற்கு வந்திருக்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முதல் கோடிகளை குவிக்கும் பல நடிகர்கள் இருந்தும் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி & பத்மஸ்ரீ கமல் ஆகியோர் வந்திருந்தனர்.

ஒரு பிரம்மாண்ட படத்திற்கே ப்ரமோஷனுக்கு இருவரும் வந்திருந்தனர்.

அப்படி இருக்கையில் இது போன்ற படங்களுக்கு விமல் போன்ற நாயகர்கள் வராதது கண்டிக்கத்தக்கது. அவர்கள் தயாரிப்பாளர்களின் வலியை புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார் அமீர்.

அமீர்

Rajini Kamal coming for Promotion Why Not Vimal Says Ameer

கமலுடன் இணைந்ததைப் போல ரஜினியுடன் இணைவீர்களா? FILMISTREET கேள்விக்கு மணிரத்னம் பதில்.?!

கமலுடன் இணைந்ததைப் போல ரஜினியுடன் இணைவீர்களா? FILMISTREET கேள்விக்கு மணிரத்னம் பதில்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

எனவே படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பொன்னியின் செல்வன் 2

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு மணிரத்னம் மற்றும் படக்குழுவினர் பதில் அளித்தனர்.

அப்போது FILMISTREET சார்பாக கேள்வி கேட்கும் போது..

“பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால் அவரை நீங்கள் நடிக்க வைக்கவில்லை.. வேண்டாம் என மறுத்து விட்டீர்கள்.

தற்போது கமலுடன் இணைந்து பணியாற்ற உள்ளீர்கள்.. அதுபோல ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? பொன்னியின் செல்வன் பாகம் 3 வந்தால் ரஜினியை இயக்குவீர்களா? என கேட்டனர்.

ரஜினி கால்ஷீட் உங்களிடம் இருக்கிறதா.? என எதிர் கேள்வி கேட்டார் மணிரத்னம்.

மேலும் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்தது என்னுடைய பாக்கியம் என தெரிவித்தார் மணிரத்னம்.

கமல் நடித்த நாயகன் மற்றும் ரஜினி நடித்த தளபதி ஆகிய படங்களை இயக்கியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் 2

Will you join  with Rajini like you joined  with Kamal? Mani Ratnam’s answer to FILMISTREET’s question.?!

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மகன்.; மகிழ்ச்சியில் நடிகர் மாதவன்.!

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மகன்.; மகிழ்ச்சியில் நடிகர் மாதவன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன்.

மாதவன் தற்போது ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் என்பவர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக பல பதக்கங்கள் பெற்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த மலேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 5 போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்ற புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த வார இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய நீச்சல் போட்டியில் கடவுளின் கருணையுடனும், உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடன் இந்தியாவுக்காக ஐந்து தங்கப் பதக்கங்களை வேதாந்த் வென்று உள்ளார். மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

madhavan son get five gold in malaysian swimming championship

JUST IN ரஜினியின் ‘பாட்ஷா’ பஞ்ச் டயலாக்கை PS2 மேடையில் பேசிய கார்த்தி

JUST IN ரஜினியின் ‘பாட்ஷா’ பஞ்ச் டயலாக்கை PS2 மேடையில் பேசிய கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 28ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசும்போது…

“இந்த PS2 படத்தை பத்திரிக்கையாளராகிய நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்.

தினமும் படத்தைப் பற்றியும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாறு பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் இந்த படம் மக்களை சென்றடைந்து வருகிறது.

முதல் பாகம் வெற்றி பெற முக்கிய காரணம் நீங்கள்தான். தலைவர் (ரஜினி) ஸ்டைலில் சொன்னால் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. நீங்கள் ஒருவர் எழுதினால் அது ஒரு லட்சம் (மக்களை சென்றடையும்) தடவை சொன்ன மாதிரி” என பேசினார் கார்த்தி.

Karthi spoke rajini dialogue at PS2 event

செய்யாத சாதனைக்காக மாதவனை வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்

செய்யாத சாதனைக்காக மாதவனை வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவனின் மகன் வேதாந்த் நீச்சலில் பதக்கங்களை குவித்து அவருக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாதவன் இந்த படங்களைப் பகிர்ந்துகொண்டு, “கடவுளின் கிருபையுடனும், உங்கள் எல்லா விருப்பங்களுடனும், 2023 மலேசிய சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் இந்தியாவிற்கு 5 தங்கங்களை (50, 100,200,400 & 1500 மீ) பெற்றுள்ளார் என்றார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது நீண்டகால நண்பரைப் பாராட்டினார், “அவரை வளர்ப்பதற்கு நீங்கள் எடுத்த தியாகம் மற்றும் சரியான முடிவுகளுக்கு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நன்றி .. கடவுள் ஆசீர்வதிப்பார்” என பதிவிட்டுள்ளார்.

A.R. Rahman credits Madhavan and his wife for their son’s latest achievements

வைபவ் – 25வது படத்திற்கு வெறித்தனமான டைட்டில் லுக் வெளியீடு

வைபவ் – 25வது படத்திற்கு வெறித்தனமான டைட்டில் லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ்.

அதன் பிறகு ’கோவா’, ‘ஈசன்’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ’பிரம்மன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

‘கப்பல்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த அவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்த நிலையில், வைபவ் நடிக்கும் 25 வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ’ரணம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் நாயகிகளாக நடிக்கவுள்ளார்.

மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.

ரணம்

vaibhav 25th movie title and poster revealed by karthik subburaj

More Articles
Follows