தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கியவர் ரஞ்சித். இந்த படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க தயாரானார் ரஞ்சித்.
ஆனால் ரஜினியின் கபாலி பட வாய்ப்பு ரஞ்சித்துக்கு வரவே, சூர்யா விட்டுக் கொடுத்தார்.
ரஜினியை இயக்கும் வாய்ப்பு எளிதில் அமையாது. எனவே அதை முடித்துவிட்டு வாருங்கள் என்றார் சூர்யா.
ஆனால் இதுவரை ரஞ்சித் அண்ட் சூர்யா இணைந்து பணியாற்றவில்லை.
தற்போது அதை போல மற்றொரு முறையும் ரஜினிக்காக டைரக்டர் சிவாவை விட்டுக் கொடுத்துள்ளார் சூர்யா.
சூர்யா நடிப்பில் சிவா இயக்கவுள்ள படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் என அறிவிப்பும் வெளியானது. இது சூர்யாவின் 39வது படமாக இருக்கும் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
ஆனால் ரஜினியின் தலைவர் 168 படத்தை சிவா இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
கிராமத்து பாணியில் உருவாகவுள்ள இப்பட சூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது.
சுதா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படம் விரைவில் முடிவுக்கு வருகிறது.
ரஜினிக்காக 2 முறை தன் இயக்குனரை விட்டுக் கொடுத்த சூர்யாவை ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
Second time Suriya clears roadblock for Rajinikanth