இந்துக் கடவுள் பெயரில் டிவி சேனல்..? ரஜினி ரசிகர்கள் வருத்தம்

இந்துக் கடவுள் பெயரில் டிவி சேனல்..? ரஜினி ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans refuse to accept TV Channel brand in Gods nameகடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.

2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். போர் (தேர்தல்) வரும் போது களத்தில் இருப்போம் என அறிவித்தார்.

தற்போது தர்பார், தலைவர் 168 என அடுத்தடுத்த படங்களில் ஒப்புக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தாலும் இடையில் கட்சி பணிகளையும் ஆலோசித்து வருகிறார்.

விரைவில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு டிவி சேனலை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

இது ரஜினி மக்கள் மன்றம் செய்திகளை மக்களுக்கு சென்றடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிவி சேனலுக்கு தலைவர் டிவி, ரஜினி டிவி என்ற பெயர்களில் ஒன்று வைக்கப்படலாம் என முன்பு கூறப்பட்டது.

தற்போது கடவுள் பெயரில்… அதாவது ராகவேந்திரா டிவி அல்லது பாபா டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் என தகவல்கள் வருகின்றன.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் ரஜினி ரசிகர்களில் பல மதங்களை சார்ந்தவர்களும் உள்ளனர். சிலர் கடவுளை மறுக்கும் நாத்திகவாதிகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் ரஜினியை தெய்வமாக வணங்குகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி அவர்கள் ஒரு இந்து கடவுளின் பெயரை தன் டிவி சேனலுக்கு வைத்தால் அது மற்ற மத ரசிகர்களை வருத்தமடைய செய்யும்.

எனவே தங்களுக்கு பிடித்தமான ரஜினி பெயரில் அல்லது தலைவர் பெயரில் டிவி சேனல் இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.

Rajini fans refuse to accept TV Channel brand in Gods name

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணையும் ரேவதி

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணையும் ரேவதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Revathi joins Kamal Haasans Thalaivan Irukkindraanசபாஷ் நாயுடு படம் என்ன ஆச்சு? என்பதே யாருக்கும் தெரியாத நிலையில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார் கமல்.

லைகா தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

அதாவது நடிகர் சயீப் அலிகான் மற்றும் அமீர்கான் இணைவார்கள் என சொல்லப்பட்டது.

மேலும் இரட்டை வேடங்களில் கமல் நடிப்பார் எனவும் தெரிகிறது.

இந்த நிலையில் கமல் ஜோடியாக ரேவதி நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே புன்னகை மன்னன், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Revathi joins Kamal Haasans Thalaivan Irukkindraan

மீண்டும் ரஜினி படத்தை தயாரிக்கும் தனுஷ்; தேசிய விருது இயக்குனரா?

மீண்டும் ரஜினி படத்தை தயாரிக்கும் தனுஷ்; தேசிய விருது இயக்குனரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Kaala again Dhanush plans to produce Rajinikanth movieமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

லைகா தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதன்பின்னர் சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தில் டிசம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதன்பின்னர் ரஜினி 2 படங்களில் நடிப்பார் எனத் தெரிகிறது.

அதில் ஒரு படத்தை லைகா தயாரிக்க கே.வி. ஆனந்த் இயக்குவாராம்.

மற்றொரு படத்தை காலா தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் தயாரிக்கிறாராம். இந்த படத்தை தேசிய விருதை வென்ற தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.

ஆக தலைவர் 169 மற்றும் தலைவர் 170 என படங்களை 2020க்குள் ரஜினி முடிப்பார் என நம்பலாம்.

காலா பட ஆடியோ விழாவில் வெற்றிமாறன் கூறிய கதையில் ஓவர் அரசியல் இருந்தது என ரஜினி கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

After Kaala again Dhanush plans to produce Rajinikanth movie

விஜய்யுடன் இணையும் குட்டி த்ரிஷா; தளபதி 64 ரிலீஸ் தேதி இதோ….

விஜய்யுடன் இணையும் குட்டி த்ரிஷா; தளபதி 64 ரிலீஸ் தேதி இதோ….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 fame Gowri likely to join with Vijay in Thalapathy 64லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என்று பெயர் வைத்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முக்கிய கேரக்டரில் ஆண்டரியா, பவித்ரா டீச்சர் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 96 படத்தில் குட்டி த்ரிஷாவாக நம்மை கவர்ந்த கௌரியும் இதில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை அடுத்த 2020 ஆண்டில் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

96 fame Gowri likely to join with Vijay in Thalapathy 64

கைதி கொடுத்த தைரியம்..; மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி

கைதி கொடுத்த தைரியம்..; மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Karthi plans to clash with Vijay in 2020 Summerவிஜய் நடித்த பிகில் அண்ட் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரு படங்களும் தீபாவளியையொட்டி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி ரிலீசானது.

விஜய் படங்களுக்கு நல்ல மார்கெட் இருப்பதால் அவரை எதிர்த்து கார்த்தி படம் வந்தபோது பலரும் பலவிதமான பேசினார்கள்.

ஆனால் பிகில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. ஆனால் கைதி படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ம் படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படம் அடுத்த வருடம் 2020 ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் கார்த்தியின் அடுத்த படமான சுல்தானும் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் என்பவர் தான் கார்த்தியின் சுல்தான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்பட மூலம் தெலுங்கில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகிறார்.

Again Karthi plans to clash with Vijay in 2020 Summer

காப்பான் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி; லைகா தயாரிப்பு.?

காப்பான் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி; லைகா தயாரிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Thalaivar 168 movie Rajini team up with Lyca for his next ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

லைகா தயாரித்துள்ள இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.

இதனையடுத்து சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தில் டிசம்பர் மாதம் முதல் சூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை 2020 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆக அடுத்த வருடம் பொங்கல் & தீபாவளிக்கு ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தலைவர் 168 படத்தை முடித்துவிட்டு மீண்டும் லைகாவுடன் ரஜினி இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த படத்தை காப்பான் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்குகிறார்.

எனவே தற்போது கே.வி. ஆனந்த் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இது தலைவர் 169 ஆக இருக்கலாம்.

After Thalaivar 168 movie Rajini team up with Lyca for his next

More Articles
Follows