தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.
2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். போர் (தேர்தல்) வரும் போது களத்தில் இருப்போம் என அறிவித்தார்.
தற்போது தர்பார், தலைவர் 168 என அடுத்தடுத்த படங்களில் ஒப்புக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தாலும் இடையில் கட்சி பணிகளையும் ஆலோசித்து வருகிறார்.
விரைவில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு டிவி சேனலை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
இது ரஜினி மக்கள் மன்றம் செய்திகளை மக்களுக்கு சென்றடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிவி சேனலுக்கு தலைவர் டிவி, ரஜினி டிவி என்ற பெயர்களில் ஒன்று வைக்கப்படலாம் என முன்பு கூறப்பட்டது.
தற்போது கடவுள் பெயரில்… அதாவது ராகவேந்திரா டிவி அல்லது பாபா டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் என தகவல்கள் வருகின்றன.
இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் ரஜினி ரசிகர்களில் பல மதங்களை சார்ந்தவர்களும் உள்ளனர். சிலர் கடவுளை மறுக்கும் நாத்திகவாதிகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் ரஜினியை தெய்வமாக வணங்குகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி அவர்கள் ஒரு இந்து கடவுளின் பெயரை தன் டிவி சேனலுக்கு வைத்தால் அது மற்ற மத ரசிகர்களை வருத்தமடைய செய்யும்.
எனவே தங்களுக்கு பிடித்தமான ரஜினி பெயரில் அல்லது தலைவர் பெயரில் டிவி சேனல் இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.
Rajini fans refuse to accept TV Channel brand in Gods name