நம்பிக்கை துரோகம்..: அரசியலுக்கு வராத ரஜினி..; விரக்தியில் உயிரை விட்ட ரசிகர்

நம்பிக்கை துரோகம்..: அரசியலுக்கு வராத ரஜினி..; விரக்தியில் உயிரை விட்ட ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஇன்று 2020 டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் 3 பக்க கடிதம் எழுதி அறிவித்தார் ரஜினி.

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்தார் ரஜினி.

அவரது ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

டிசம்பர் மாத ஆரம்பத்தில்.. ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை காட்டினார். ஆனால் டிசம்பர் இறுதியில் ஏமாற்றிவிட்டார்.

இதனால் அவரது ரசிகர்கள், ரஜினி வீடு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீண்டும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வராமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதால் விழுப்புரத்தைச் சேர்ந்த ரசிகர் ராஜ்குமார் என்ற ரசிகர் விரக்தியால் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Rajini fan commits suicide after his idol quits politics

Rajini fan suicide

மோடி-ரஜினி என் இரு கண்கள்.. ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன்.. – அர்ஜுனமூர்த்தி

மோடி-ரஜினி என் இரு கண்கள்.. ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன்.. – அர்ஜுனமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth modiபா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தவர் அர்ஜுனமூர்த்தி.

ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் சேர்வதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும் கூறியிருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக, தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்… அர்ஜுனமூர்த்தி தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காக செய்தியாளர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று பிற்பகலில் அழைத்திருந்தார்.

அப்போது பேசிய அவர், “ரஜினி அரசியலுக்கு வர இயலாத நிலை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை சக குடும்பத்தினர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையின்போது எடுக்கப்படும் முடிவு போலவே கருத வேண்டும்.

“எனது இரண்டு கண்களில் ஒரு கண் நரேந்திர மோடி, இன்னொரு கண் ரஜினிகாந்த்.

இந்த இருவருமே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள். அதனால் ஈர்க்கப்பட்டே இருவரின் தலைமையை நான் ஏற்றேன்.

மருத்துவர்கள் ரஜினிக்கு ஓய்வு வேண்டும் என கூறியிருக்கிறார்கள். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். ரஜினியின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரஜினியுடனேயே தொடர்ந்து இருப்பேன். எனக்கு பாஜகவுடன் நெருங்கிய உறவு உள்ளது. அங்குள்ள தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு உள்ளது. மீண்டும் பாஜகவில் சேருவது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை,” என்றார்.

Rajinikanth Arjuna Murthy

Arjuna Murthy about Rajini and Modi

இறப்பு தழுவும் வரை இனி அரசியல் இல்லை..; ரஜினி முடிவால் தமிழருவி மணியன் ‘அரசியல் முழுக்கு’

இறப்பு தழுவும் வரை இனி அரசியல் இல்லை..; ரஜினி முடிவால் தமிழருவி மணியன் ‘அரசியல் முழுக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth tamilaruvi manianஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் எஅன்று கூறி வந்த ரஜினிகாந்த்.. திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி ‘இனி கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை’ என நேற்று அறிவித்தார்.

கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த அன்றைய நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினிகாந்த் நியமனம் செய்திருந்தார்.

ரஜினி கட்சி தொடங்கிய பின், காந்திய மக்கள் இயக்கம் அதனுடன் இணைத்துக் கொள்ளப்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்… காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்று என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மன நோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன.

எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக் கொள்கிறேன்.

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்.

நான் போகிறேன். வரமாட்டேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.

Gandhiya Makkal Iyakkam head Tamilaruvi Manian quit electoral politics

ஆசை காட்டி மோசம் செய்த ரஜினி.?; அரசியலுக்கு அழைத்து வள்ளுவர் கோட்டத்தில் குவிந்த ரசிகர்கள்

ஆசை காட்டி மோசம் செய்த ரஜினி.?; அரசியலுக்கு அழைத்து வள்ளுவர் கோட்டத்தில் குவிந்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநாளை டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக நேற்று 3 பக்க கடிதம் எழுதி அறிவித்தார் ரஜினி.

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

டிசம்பர் மாத ஆரம்பத்தில்.. ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை காட்டினார். ஆனால் டிசம்பர் இறுதியில் ஏமாற்றிவிட்டார்.

இதனால் அவரது ரசிகர்கள், ரஜினி வீடு முன் அமர்ந்துகொண்டு நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து போராடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

இந்த போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

வள்ளுவர் கோட்டத்தில் போராடிவரும் ரஜினி ரசிகர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

சில மணி நேரங்களில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Rajini fans protest in Valluvar kottam

இப்பவாச்சும் சொன்னாரே ரஜினி… உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. – கஸ்தூரி

இப்பவாச்சும் சொன்னாரே ரஜினி… உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. – கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kasthuriதேர்தல் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலையை நேற்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாக வெளியிட்டார்.

அதில்.. “நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது” என்றார்.

மேலும்… “என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

ரஜினியின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும் நல்ல அரசியல் மாற்றத்தை எதிர்ப்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் முடிவு குறித்து
நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்..

“எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம்.

வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை.

கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.

ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்” என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

Kasthuri about Rajinikanth political desicion

மாஸ்டர் ரிலீஸ்… விஜய் வேண்டுகோள்.; முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் பேட்டி

மாஸ்டர் ரிலீஸ்… விஜய் வேண்டுகோள்.; முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வரை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வைத்துள்ள கோரிக்கையை ஆலோசித்து நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார் என கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

CM will take good decision about Master release says minister

More Articles
Follows