பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்; நண்பரை கலாய்த்த கமல்!

Rajini didnt give answer for many questions says Kamalகடந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற தன் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

அன்றுமுதல் தன் கட்சி தொடர்பான பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.

தற்போது கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதற்கு முன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்…

“குரங்கணி காட்டு தீ விபத்தை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி விட்டது” என்றார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் பதில் சொல்லாமல் நழுவுகிறாரே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு… ”பல விஷயங்களில் அவர் அப்படித்தான் பதில் சொல்லாமல் இருக்கிறார்” என்று பதிலளித்தார் கமல்.

Rajini didnt give answer for many questions says Kamal

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post