தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்ஜிஆர் சிலை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
அப்போது மீம்ஸ் போட்டு கலாய்க்கும் கும்பலுக்கும் அவர் பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.
அவர் பேசியதாவது…
நான் கடந்த ஆண்டு 2017 டிசம்பர் 31ஆம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியிருந்தேன்.
ஆனால் அதற்கு முன்பே உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். அதுவும் ஒரு சின்ன மீடியா பையன்.
அதுபற்றி பேசும்போது எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி. என்று பேசியிருந்தேன்.
கொள்கை இல்லாதவரா? என்றெல்லாம் என்னை பேசினார்கள்.
அது ஒரு விவாதப்பொருளாக மாறியது.
இது எப்படி இருக்கிறது என்றால்…. பெண் பார்க்க செல்கிறேன் என்றால், அப்போதே திருமண பத்திரிகை எங்கே? என்று கேட்பதுபோல் உள்ளது.” என்று மீம்ஸ் போடுபவர்களையும் ஆர்வக் கோளாறு கேள்வியாளர்களையும் சாடினார் ரஜினிகாந்த்.
இந்த விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Oru nimisham Thala Suthidichu Rajini criticized Memes creators