ரஜினி கட்சி. கமல் நட்பு. மோடி திட்டம்.. பற்றி ரஜினி அண்ணன் பேட்டி

ரஜினி கட்சி. கமல் நட்பு. மோடி திட்டம்.. பற்றி ரஜினி அண்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“ரஜினிகாந்த் சொன்னபடி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்.

மோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு வாக்களிக்குமாறும் ரஜினி கூறவில்லை.

மே 23-ம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இடையிலான நட்பு என்றைக்கும் நிலைக்கும்… ” என்றார் சத்யநாராயணராவ்

சூப்பர் ஹிட்டான மஜிலி-யை தமிழுக்கு கொண்டு வரும் தனுஷ்

சூப்பர் ஹிட்டான மஜிலி-யை தமிழுக்கு கொண்டு வரும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush likely to star in Tamil remake of Majiliதிருமணத்திற்கு பிறகு நாகசைதன்யா-சமந்தா இணைந்து நடித்த படம் மஜிலி.

சிவா நிர்வாணா இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் 4-ந்தேதி திரைக்கு வந்தது.

இந்த நிலையில், மஜிலி படத்தை பார்த்த தனுஷ் அந்த படத்தில் நாக சைதன்யா நடித்த வேடம் தனக்கு செட்டாகும் என நினைத்திருப்பார் போல.

எனவே அப்பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம் தனுஷ்.

இப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால் தன் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் இப்பட அறிவிப்பை தனுஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Dhanush likely to star in Tamil remake of Majili

வைபவ் படத்திற்காக வெங்கட் பிரபுவை வில்லனாக்கிய நிதின் சத்யா

வைபவ் படத்திற்காக வெங்கட் பிரபுவை வில்லனாக்கிய நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabu as baddie in Nithin Sathyas next movie

“ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார்.

இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய SG சார்லஸ் இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்
கலை – ஆனந்த் மணி
சண்டைப்பயிற்சி – மிராக்கல் மைக்கேல

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

Venkat Prabu as baddie in Nithin Sathyas next movie

மக்கள் கருத்தை எதிரொலித்த Filmi Street.; வசூல் வேட்டையாடும் ‘காஞ்சனா3’

மக்கள் கருத்தை எதிரொலித்த Filmi Street.; வசூல் வேட்டையாடும் ‘காஞ்சனா3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Filmi Street review effect Kanchana3 box office collection updatesராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் நேற்று முன் தினம் ஏப்ரல் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இதில் ஓவியா, வேதிகா, நிக்கி உள்ளிட்டோர் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இப்படத்தை பார்த்த விமர்சகர்கள் பலரும் வழக்கமான கதை தான், லாஜிக் இல்லை, அரைத்த மாவு என்றனர். குறைந்த மதிப்பெண்களையே வழங்கியிருந்தனர்.

இவை உண்மையாக இருந்தாலும்  நம் விமர்சனத்தில் இந்த படம் நிச்சயம் மக்களை கவரும் என்று தெரிவித்து இருந்தோம்.

பெரும்பாலான மக்களை ஒரு படம் கவர்ந்தால் அவை நிச்சயம் வெற்றிப்படமே. எனவே மக்களை மனதில் கொண்டு 3.5/5 என்ற ரேட்டிங்கையும் கொடுத்து இருந்தோம்.

தற்போது மக்கள் கருத்தை நாங்கள் எதிரொலித்தது போல வெளியான அனைத்து தியேட்டர்களில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

குழந்தைகள் அனைவரும் படத்தை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர். குழந்தைகளுடன் பெண்களும் இப்படத்தை ரசித்து வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேரடி தெலுங்குப் படங்கள் அளவிற்கு வசூல் செய்து வருகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 53 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Filmi Street review effect Kanchana3 box office collection updates

 

சிவகார்த்திகேயனுக்கு முன்பே கௌதம் கார்த்திக் வரட்டும்; ஞானவேல்ராஜா முடிவு

சிவகார்த்திகேயனுக்கு முன்பே கௌதம் கார்த்திக் வரட்டும்; ஞானவேல்ராஜா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanavel Raja's sudden plan on Sivakarthikeyan and Gautham Karthik moviesஎம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்துள்ள படம் மிஸ்டர். லோக்கல்.

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘தேவராட்டம்’.

இந்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இதில் Mr லோக்கல் படத்தை மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டனர்.

ஆனால் தற்போது மே 17-ல் வெளியாகும் என வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

ஆனால் தேவராட்டம் படத்தை மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர்.

Gnanavel Raja’s sudden plan on Sivakarthikeyan and Gautham Karthik movies

இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்; ரஜினி-கமல் இரங்கல்

இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்; ரஜினி-கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal condemns Sri lanks bomb blastsஇன்று ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாப்படுகிறது.

காலை நேரத்தில் சந்தோஷமாக கொண்டாடப்பட்ட அந்த வேளையில், இலங்கையில் சர்ச் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்த வெடிகுண்டுகள் வெடித்தன.

கிட்டதட்ட 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 210 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நல்ல உள்ளங்கள் அனைவரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் பதிவில்… ”ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” எனக் கூறியுள்ளார்.

கமல் பதிவிட்டுள்ள பதிவு இதோ…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Violence can never be the final solution to human disagreements. Ironic that the island that spawned the word serendipity is not able to find it. My deepest sympathies to those affected by the bombs in Srilanka. The government should be impartial and swift in rendering Justice.

Rajini and Kamal condemns Sri lanks bomb blasts

More Articles
Follows