தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால் பல உயிர்கள் தினம் தினம் செத்து மடிகிறது.
சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் மோசமான நிலையே நீடித்து வருகிறது.
இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் அந்தந்த நாடுகளில் தங்கள் இயன்றவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிங்கப்பூர் அரசு பெரும் அச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரபலங்களின் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை அங்கு ஒளிப்பரப்பி வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் சச்சின் டென்டுல்கர் ஆகியோரது வீடியோக்களை வைத்து, அந்நாட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறதாம்.
இந்தியாவில் மட்டுமல்ல நடிகர் ரஜினிக்கு உலகின் பல நாடுகளிலும் லட்சக்கணக்கில் தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini and Sachins Covid 19 awareness in Singapore