திமுக வெற்றிக்கு ரஜினியே காரணம்.; ஹிந்தி தெரியுமென்று தயாநிதி மாறனை MP ஆக்கியவர் கருணாநிதி.; சூர்யா தெரியாமல் பேசுகிறார்.. – ராதாரவி

திமுக வெற்றிக்கு ரஜினியே காரணம்.; ஹிந்தி தெரியுமென்று தயாநிதி மாறனை MP ஆக்கியவர் கருணாநிதி.; சூர்யா தெரியாமல் பேசுகிறார்.. – ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radharaviசினிமாவில் பல படங்களில் பல வேடங்களை போட்டு அசத்தியவர் டத்தோ ராதாரவி.

அதுபோல் பல கட்சிகளிலும் இவர் இருந்து பிரிந்து சென்றிருக்கிறார்.

இவர் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா குறித்து கேவலமாக நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் பேசினார்.

இதனையடுத்து நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து அதிமுகவில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராதாரவி.

இவர் மேடைகளில் பேசினாலே ஏதாவது பரபரப்பு உண்டாகும். தற்போது கொரோனா ஊரடங்கால் எந்த நிகழ்ச்சியும் இல்லை.

இந்த நிலையில் இன்று ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.

அதில்…

அடுத்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்.

நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட 2 முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் உருப்படாது..

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம்.

நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார்.

தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு ஹிந்தி தெரியும் என்று சொன்னவர் கருணாநிதி.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

Radharavi praises super star rajinikanth

கில்லர் பர்ஃபாமென்ஸ்…; பிரிட்டன் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் தனுஷ் & அனிருத்தின் ஹிட் சாங்

கில்லர் பர்ஃபாமென்ஸ்…; பிரிட்டன் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் தனுஷ் & அனிருத்தின் ஹிட் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari thara local songபிரிட்டன் நாட்டில் நடத்தப்படும் ‘காட் டேலண்ட்’ என்ற நடன ரியாலிட்டி ஷோவில் மாரி பட டைட்டில் பாடல் இடம்பெற்றுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த டான்ஸ் குழுவினர், மாரி படப்பாடலுக்கு அக்ரோபேட்டிக்ஸ் நடனமாடி அசத்தியுள்ளனர்.

இதனையறிந்த மாரி பட டைரக்டர் பாலாஜி மோகன் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அந்த நடனத்தை பார்த்து ‘கில்லர் பர்ஃபாமென்ஸ்’ எனப் பாராட்டியுள்ளார்.

“மாரி தர லோக்கல்” என்ற பாடலுக்கு இசையமைத்த அனிருத்துக்கும் பாடலை எழுதி பாடிய தனுஷுக்கும் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார்.

இந்த படம் 2015ம் ஆண்டு வெளியானது.

Maari Thara local song played on international tv show

அம்மா நகரும் நியாய விலை கடைகள் ஆரம்பம்..; 5,36,000 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்!

அம்மா நகரும் நியாய விலை கடைகள் ஆரம்பம்..; 5,36,000 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edapadi palani samyவிரைவில் அம்மா நகரும் நியாய விலை கடை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகளுக்கான திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.

அம்மா நகரும் நியாய விலை கடைகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்படத் தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்மா நகரும் நியாய விலை வாகனங்களை தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர் என தெரிவித்துள்ளனர்.

மேலும் மலைப் பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளை கவனத்தில் கொண்டு நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

TN Cm inaugurates mobile ration shops

விஜய் டிவி நடிகைக்கு கொரோனா..; தனிமையில் தவிக்கும் ‘அரண்மனை கிளி’

விஜய் டிவி நடிகைக்கு கொரோனா..; தனிமையில் தவிக்கும் ‘அரண்மனை கிளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aranmanai kili serialஉலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனால் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகைக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அரண்மனை கிளி சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மோனிஷா.

இவர் தனக்கு கோவிட் பாசிட்டீவ் என இன்ஸ்டாகிராமிவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவர் தன்னை தானே தனிமைப்படுத்தி உள்ளாராம்.

Aranmanai Kili serial fame Monisha tests positive for COVID-19

காந்தி ஜெயந்தி முதல் அமேசானில்.. மாதவன் & அனுஷ்கா மீண்டும் இணைந்த ‘நிசப்தம்’

காந்தி ஜெயந்தி முதல் அமேசானில்.. மாதவன் & அனுஷ்கா மீண்டும் இணைந்த ‘நிசப்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nishabdham posterடி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.

படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஒரு ஆர்வத்தை உருவாக்கிய அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் நிஷப்தத்தின் டிரெய்லரை வெளியிட்டது.

சைலன்ஸ் என்ற தலைப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது,

மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் அமேசான் ப்ரைமில் படத்தை ஸ்டிரீம் செய்யலாம்.

டிரெய்லரை இங்கே பாருங்கள்: https://www.youtube.com/watch?v=Gun6uT6buDc&feature=youtu.be

கதைச் சுருக்கம்:

செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள்.

துப்பறியும் போலீஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர்.

கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.

suspense thriller nisabdham to hit OTT on october 2nd

ஐ.பி.எல். ஆட்டம்..; சென்னை அணி வெற்றிக்கு ரஜினி பன்ச் டயலாக் சொன்ன இம்ரான் தாஹிர்

ஐ.பி.எல். ஆட்டம்..; சென்னை அணி வெற்றிக்கு ரஜினி பன்ச் டயலாக் சொன்ன இம்ரான் தாஹிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini tahirசெப். 19 நேற்றிரவு அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி & நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பின், முதன் முறையாக டோனி நேற்று ஐபிஎல் போட்டியில் களம் கண்டார்.

அதில் சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியைக் குறிப்பிடும் வகையில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “திரும்பவும் நீ எங்களை(சென்னை சூப்பர் கிங்ஸ்) தொட்டிருக்கக் கூடாது. தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை.

இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில்” என்று பதிவிட்டுள்ளார்.

இது CSK ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Thirumbavum nee yengala @ChennaiIPL thoturukka koodadu.Thotutey thottavana nanga vittadey illai.Ippa thane kaliyoda attame arambamagi irukku.

innum neraya sirappana tharamana sambhavangal kathukittu irukku #eduda vandiya poduda whistle — Imran Tahir (@ImranTahirSA) September 19, 2020

Imran Tahir tweets on CSKs first victory

More Articles
Follows