புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டரை மிரட்டும் ரசிகர்கள்.; போலீஸ் பாதுகாப்பு

புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டரை மிரட்டும் ரசிகர்கள்.; போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த‌ அக்டோபர் மாதம் 29‍-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46). இது இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.

தற்போது அவருக்கு இறுதி நேரத்தில் சிகிச்சையளித்த டாக்டர் ரமணராவ் என்பவரை அவரது ரசிகர்கள் மிரட்டத் தொடங்கியுள்ளனர்..

புனித் ஆபத்தான நிலையில் இருந்தபோது அவரை ஏன் ஆம்புலன்ஸில் அனுப்பவில்லை? இது டாக்டரின் அலட்சியமே என கூறி அவரை மிரட்டியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

இந்த புகார் குறித்து டாக்டர் ரமணராவ் கூறியுள்ளதாவது…

”புனித் என் மகனைப் போன்றவர். அவரது இறப்பு ரசிகர்களைப் போலவே எனக்கும் வேதனையான ஒன்றுதான்.

புனித் என் கிளினிக்கு வந்தபோது இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.

அப்போது ஹார்ட் அட்டாக் அறிகுறி தென்பட்டதால், அவரது மனைவி அஸ்வினியிடம் தகவல் தெரிவித்து விக்ரம் மருத்துவமனைக்குக் கொண்டு போக சொன்னேன்.

அப்போது ஆம்புலன்ஸ் வரவழைத்து இருந்தால், டிராப்பிக்கில் வருவதற்கே குறைந்தபட்சம் 10-15 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.

பின்னர் இங்கிருந்து அங்கு செல்வதற்கு 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்.

எனவே தான் அவரது காரிலேயே விக்ரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

புனித் சிகிச்சையில் எவ்வித தாமதமும் அலட்சியமும் காட்டவில்லை” என டாக்டர் ரமணராவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புனித் ரசிகர்கள். இல்லையெனில் பெங்களூருவில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதனால் கர்நாடக மாநில தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பினர் “டாக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்”என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டாக்டர் ரமணராவ்வின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய‌ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Puneeth Rajkumar’s doctor given police protection after protests by his fans

டைரக்டர் & டைட்டில் மாற்றம்.; தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் கம்ப்ளைண்ட்

டைரக்டர் & டைட்டில் மாற்றம்.; தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் கம்ப்ளைண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘அன்புசெல்வன்’.

இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கௌதம் மேன்ன் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டார்.

ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை எனக்கே இது ஷாக் நியூஸ் என தெரிவித்தார் கவுதம் மேனன். இதனால் தனது டுவிட்டர் பதிவை நீக்கினார் பா.ரஞ்சித். இந்த பரபரப்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இதன்பின்னர் படக்குழு கௌதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டனர்.

வினா என்ற படத்தின் பெயர் தற்போது அன்பு செல்வன் என மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அன்பு செல்வன் குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் மேனன் புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஜெய் கணேஷ் இயக்கத்தில் வினா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

2018ம் ஆண்டில் சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன்.

ஆனால் அதன்பின்னர் எந்த பணிகளும் நடக்கவில்லை.

தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன்.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படத்தின் தலைப்பு, இயக்குனரை மாற்றி அன்புசெல்வன் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

அதனை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாராளித்துள்ளார் கௌதம் மேனன்.

Director Gautham Menon complains Anbu Selvan team

ட்டான்னு.. ட்டான்னு.. ‘டான்’ பட டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்

ட்டான்னு.. ட்டான்னு.. ‘டான்’ பட டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ பட ரூ 100 கோடியை வசூலித்த மகிழ்ச்சியில் உள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நடித்து வரும் “டான்” படத்தை சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இதிலும் டாக்டர் பட நாயகி பிரியங்கா நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் பணிகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னையில் ஓயாமல் மழை பெய்து வந்தாலும் “டான்” படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

எனவே விரைவில் பட போஸ்டர்கள், டீசர், சிங்கிள் ட்ராக் லான்ச் உள்ளிட்வைகளை எதிர்பார்க்கலாம்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தோடு இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan completed his dubbing portion of Don

சூர்யா-கார்த்தி கூட்டணியில் ஷங்கர் மகள் இணையும் பட சூட்டிங் அப்டேட்

சூர்யா-கார்த்தி கூட்டணியில் ஷங்கர் மகள் இணையும் பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களை சிட்டி பட இயக்குனர் என்று சொன்னால் ஒரு சிலரை கிராமத்து பட இயக்குனர் என சொல்லலாம்.

அதில் 2வது வகையை சார்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவரது படங்களில் கிராமத்து மண் வாசனையுடன் அதிரடி ஆக்சனும் கலந்து இருக்கும்.

முத்தையா இயக்கிய குட்டிப்புலி, கொம்பன், தேவராட்டம், மருது, புலிக்குத்தி பாண்டி என பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.

இந்த படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

‘கொம்பன்’ படத்திற்கு பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தி முத்தையா ராஜ்கிரண் இணையும் படம் இது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

அடுத்தாண்டு 2022 மார்ச் / ஏப்ரல் மாதத்திற்குள் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Aditi Shankar’s Viruman movie updates

ஜாக்கெட் அணியாமல் ரசிகர்களை சூடேற்றிய விஜய்-தனுஷ் பட நாயகி

ஜாக்கெட் அணியாமல் ரசிகர்களை சூடேற்றிய விஜய்-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த பேட்ட படத்தில் ச்சிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த படத்தின் கதையே இவரைச் சுற்றியே நகர்வதாக இருக்கும்.

ரஜினி படத்தில் நடித்த பெயரால் உடனே விஜய் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து தனுஷின் ‘மாறன்’ படத்திலும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது ‘யுத்ரா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

இவர் சோஷியல் மீடியாவில் தன் போட்டோக்களை அதிளவில் போஸ்ட் கொண்டே செய்திருப்பார். ஒவ்வொன்றும் பல லைக்ஸ்களை அள்ளும்.

சில படங்கள் படு கிளாமராக இருக்கும். தற்போது பட்டுப் புடவையில் ஜாக்கெட் அணியாமல் எடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தன் இடுப்பில் ஒரு அழகான டாட்டூ குத்தியிருக்கிறார் மாலு.

இந்த படங்கள் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்துள்ளது.

மழை காலத்தில் எங்களை சூடேற்ற வந்த மாலுவே… என ரசிகர்கள் சொல்லாமல் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Vijay Dhanush film heroine’s glamour pic goes viral

வாரே வாவ்…. பொதுமேடையில் ‘வலிமை’ வில்லனின் ரொமான்ஸ்

வாரே வாவ்…. பொதுமேடையில் ‘வலிமை’ வில்லனின் ரொமான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.

இவர் தற்போது தெலுங்கில ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் புரமோஷன் விழாவில் இவர் கலந்துக் கொண்ட போது தன் காதலியுடன் ரொமான்ஸ் செய்துள்ளார். அதாவது தன் வருங்கால மனைவிக்கு பூங்கொடுத்து ப்ரோபோஸ் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ல் நடிகர் கார்த்திக்கேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த மாதம் நவம்பர் 21ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றவுள்ளது,

இவர்களின் காதலின் வயது 10 என்பது குறிப்பிடத்தக்கது.

தன் காதலிக்கு கார்த்திகேயா புரோபோஸ் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Valimai villain’s romance at public place

More Articles
Follows