இப்படி நினைக்கவே இல்லை.. ; புனித் வீட்டில் சிவகார்த்திகேயன் உருக்கம்

இப்படி நினைக்கவே இல்லை.. ; புனித் வீட்டில் சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29 அன்று காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்திய சினிமாவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 1 பெங்களூர் சென்று புனித் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஒரு நாள் ஒரு மேடையில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி செய்தேன். அப்போது புனித் என்னைப் பாராட்டினார்.

சில நேரங்களில் போனில் பேசுவோம். அப்போது ஒரு நாள் “உங்களை ரொம்பப் பிடிக்கும். பெங்களூருக்கு வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

எனவே அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இப்படியொரு தருணம் நடக்கும் என நினைக்கவே இல்லை.

நிஜ வாழ்க்கையில் புனித் சார் மாதிரி நிறைய நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். அவருடைய நல்ல உள்ளத்திற்காகவே அவர் எப்போதுமே நினைவில் நிற்பார்.

ஒரு நாயகனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் புனித் சார்.” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

Actor Sivakarthikeyan breaks down after paying homage to Puneeth Rajkumar in Yeshwanthpur

நயட்டு ரீமேக் : தமிழில் கௌதம்மேனன்.. ஹிந்தி-தெலுங்கு அப்டேட் இதோ…

நயட்டு ரீமேக் : தமிழில் கௌதம்மேனன்.. ஹிந்தி-தெலுங்கு அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள இயக்குனர் மார்டின் பிரகாட் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் வெளியான மலையாள படம் நாயட்டு. (நயட்டு).

இதில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

ரஞ்சித், சசிதரன், மார்டின் பிரகாட் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர்.

ஒரு நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் கலந்து யதார்த்தமாக உருவான படம் இது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படத்திற்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் மவுசு கூடியது.

தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

அதன்படி தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இதில் ராவ் ரமேஷ், அஞ்சலி, பிரியதர்ஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படங்களை இயக்குனர் கருணா குமார் இயக்குகிறார்.

இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார்.

Nayattu movie remake rights updates here

புனித் ராஜ்குமார் செய்த கல்விச்சேவையை ஏற்றுக் கொண்ட விஷால்

புனித் ராஜ்குமார் செய்த கல்விச்சேவையை ஏற்றுக் கொண்ட விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி உள்ளிட்ட நடித்துள்ள ‘எனிமி’ படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ம் தேதி ரிலீசாகிறது.

வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகிறது.

‘எனிமி’ படத்தின் தெலுங்கு பட புரோமோசன் நிகழ்ச்சியில் விஷால் கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது ‘எனிமி’ படக்குழுவினர் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது…

“புனித் ராஜ்குமார் நல்ல நடிகர்… நல்ல நண்பரும் கூட.

ஒரு பணிவான சூப்பர் ஸ்டார். ஏராளமான சமூக பணிகளை புனிதி செய்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் புனித் ராஜ்குமாரிடமிருந்து 1800 மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு விஷால் பேசினார்.

Actor Vishal to sponsor education of 1800 students funded by late actor Puneeth Rajkumar

கதையை கேட்டதுமே விஜய்-அஜீத் படம் போல் இருந்தது.. – ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்

கதையை கேட்டதுமே விஜய்-அஜீத் படம் போல் இருந்தது.. – ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் *பாயும் ஒளி நீ எனக்கு*

விக்ரம் பிரபு மற்றும் வாணிபோஜன் இருவரும் ஜோடியாக நடித்துள்னர்.

வில்லனாக கன்னட நடிகர் *தனன்ஜெயா* நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார்.

இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர்.

பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். ஒளிப்பதிவு ஸ்ரீதர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சாகர்.

தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது:*

கொரோனா என்ற காலகட்டத்தில் ஒரு விஷயத்தை எடுத்துமுடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும்

உச்சகட்டத்தில்தான் இந்த படம் அமைந்தது. இதில் நிறைய விஷயங்கள் நடந்தது. நல்ல விஷயம் என்னவென்றால் இயக்குனர் கார்த்திக் அப்போ பேசிய தமிழை விட இப்போது பேசிய தமிழ் நன்றாக இருந்தது. இப்போது பேசியது புரிகிறது அப்போது புரிவது ரொம்ப கஷ்டம். இதற்காக கொரோனா காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்கள் என்பதை ஒரு டைரக்டராக இல்லாமல் ஒரு ரசிகராக இருந்து பார்த்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.அவருடன் பக்க பலமாக இருந்த கோ டைரக்டர் ஹரேந்தர் மற்றும் இயக்குனர்கள் குழுவுக்கு பாராட்டுக்கள்.

பாயும் ஒளி நீ எனக்கு பெரிய படம். இந்த படத்தில் இயக்குனர் பணியும் ஒளிப்பதிவாளரின் பணியும் நன்றாக இருந்தது.எல்லா விஷயத் தையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் லைட் என்ற விஷயம் மிக முக்கியம் அதை மிக அற்புதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர்.

அதனை உடனிருந்து நான் பார்த்தேன். மற்ற நடிகர்களுடன் நடிப்பது ரொம்பவே நல்ல விஷயம். இதில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரிடம் எப்போதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். நிறைய பாசிடிவ் எண்ணம் கொண்டவர்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

எந்நேரமும் வாணி சிரித்த முகத்துடன் இருப்பார். அவருடைய அமைதியான முகத்தை பார்க்க நன்றாக இருக்கும். எல்லா டெக்னிஷீயன்களுக்கும் நன்றி தயாரிப்பாளர் குமாரசாமி பத்திக்கொண்டா. பிரமாண்ட செலவில் படம் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாகர் செய்திருக்கும் பாடல்களும் நன்றாக இருக்கிறது.

ராப் பாடல் எல்லாருக்கும் நன்றாக பிடிக்கும். பொதுவாக ஆக்‌ஷன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ஆக்‌ஷன் மிக வித்தியாசமாக இருக்கும் தினேஷ் மாஸ்டர் சண்டைகள் அமைத்திருக்கிறார். எல்லாருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு நடந்த நேரத்தில் இங்கு தேர்தல் நடந்தது.

அதனால் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பரபரப்பிலும் எடிட்டிங் டீம் நன்றாக பணியாற்றியது.

இந்த கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் பாதுகாப்பு விஷயங் களை பின்பற்றுங்கள்.

இவ்வாறு விக்ரம்பிரபு பேசினார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:*

“இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு நன்றி.

விக்ரம் பிரபு சார் கடின உழைப்பை தந்திருக்கிறார். வாணிபோஜன் மற்ற நட்சத்திரங்கள், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசை அமைப்பாளர் சாகர் எல்லா டெக்னிஷியன்களும் சிறப்பான பணி அளித்திருக்கிறார்கள். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவு இப்படத்திற்கு தர வேண்டும்

*ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்:* பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றினேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் அடுத்தடுத்து எந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. எனவே வழக்கமான படங்களை செய்ய எண்ணுவதில்லை. ஆனால் எல்லோரும் நல்ல இண்ட்ரஸ்டிங் கான கதைகள் சொல்கிறார்கள்.

கொரோனா காலகட்ட இடைவேளையில் தான் இயக்குனர் கார்த்திக் என்னை தொடர்புகொண்டு படம் செய்யலாமா? என்றார். ஒப்புக் கொண்டேன். பாயும் ஒளி நீ எனக்கு பட கதையை கேட்டேன். விஜய் சார், அஜீத் சார் படம் போல் பெரிய படமாக இருந்தது.

இது ஆக்‌ஷன் படம். எல்லா ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ஆக்‌ஷன் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு நன்காவது படத்திலேயே இப்படி அமைந்தது. நம்பவே முடியவில்லை நன்றாக தயாராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இயக்குனருடன் நல்ல நட்பு இருந்தது.

இருவரும் படம் எப்படியெல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பேசினோம். வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படம் போல் இல்லாமல் உலக அளவிலான படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் இருவரின் எண்ணம் ஒன்றுபோல் இருந்தது.

அதற்கான படத்தில் லைட்டிங் எப்படி இருக்க வேண்டும், காஸ்டியூம் எப்படி இருக்க வேண்டும், புரடக்‌ஷன் டிசைன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த்து செய்தோம்.

படத்தில் ஆறேழு சண்டை காட்சிகள் இருக்கும். அதுவும் ஒன்று போல் இருக்கக்கூடாது என்று எண்ணினோம். பாயும் ஒளி நீ எனக்கு படம் எடுப்பதற்கே மிகவும் கடினமான உழைப்பு தேவைபட்டது.

மதியம் படப்பிடிப்பு தொடங்கினால் அடுத்த நாள் காலை வரை படப்பிடிப்பு நடக்கும். சென்னை வெயில் எப்படிப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் அதையும் பொறுத்துக்கொண்டுதான் எல்லோரும் பணியாற்றினர்கள்.

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும். நடிப்பும் மிக நன்றாக இருக்கும் எல்லா கட்சிகளையும் ஒரே ஷாட்டில் முடித்துவிடுவார். அதனால் படக் குழுவினர் முதலிலேயே ஒத்திகை யெல்லாம் முடித்து தயாரான பிறகுதான் அவரை செட்டுக்கு அழைப்போம். அந்தளவுக்கு அவர் தொழில் நேர்த்தி கொண்டவர். அவர் நன்றாக செய்யும்போது மற்ற ஆர்ட்டிஸ்டுகளும் நன்றாக செய்து விடுவார்கள்.

விக்ரம் பிரபு எல்லாவற்றிலும் அக்கறை எடுத்து ஊக்குவிப்பார். வாணி போஜனும் மிகவும் ஈடுபாடுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார் . அவருக்கு எனது குடும்பத்தினர் அனைவரும் ரசிகர்கள் அதனால் வீட்டிலிருந்து புறப்படும் போதே என் மனைவி அடிக்கடி சொல்வார். வாணி போஜனை அழகாக காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்புவார்கள். அவரை மிகவும் அழகாக காட்டியிருக்கிறோம்.

விக்ரம் பிரபு, வாணி ஜோடி மிகவும் பொருத்தமாக அழகாக அமைந்திருக்கிறது.

படப்பிடிப்பில் கஷ்டத்தை பொருட் படுத்தாமல் நடித்தார்கள். 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. கடுமையான வெயில் தொடங்கி நல்ளிரவு முழுவதும் படப்பிடிப்பு நடக்கும். நாளொன்றுக்கு 18 மணிநேரம் தொடர்ச்சியாக நடித்துவிட்டு மீண்டும் அடுத்தநாள் படப்பிடிப்பில் பங்கேற்பார்கள்.

இடையில் 2 மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு ஓய்வு இருந்தது. 10 நாட்களில் 240 மணி நேரம்தான் இருக்கும். அதில் 180 மணி நேரம் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த நாட்களில் விக்ரம்பிரபு, வாணிபோஜன் கொடுத்த ஒத்துழைப் பால்தான் இதனை சாதிக்க முடிந்தது.

அதுவும் ஆக்‌ஷன் காட்சியில் நடிக்கும்போது விக்ரம் பிரபுவுக்கு காலில் அடியெல்லாம் பட்டிருக்கும் அதையும் பொருட்படுத்தாமல் மறுநாள் வலியை வெளிக்காட்டாமல் காதல் காட்சியில் நடிப்பார். எல்லா படத்துக்கும் கடினமாக உழைப்பார்கள். இந்த படத்துக்கு மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறினார்.

*வாணிபோஜன் கூறியதாவது:*

தயாரிப்பாளர் அவர்களுக்கு பெரிய நன்றி. இயக்குனர் கார்த்திக் என்னிடம் கதை சொல்லவந்தபோது பாதி தெலுங்கு, பாதி தமிழில் கஷ்டப்பட்டு சொன்னார். அது புரிந்தது. அதே சமயம் அங்கிருந்து இங்குவந்து படம் செய்ய வேண்டும் என்று கடினமாக உழைத்திருக்கிறார். அவருக்கு பெரிய நன்றி.

எந்த ஒரு படத்துக்கும் நான் காஸ்டியூம் மேக்கப் எல்லாம் அதிகம் பார்த்தது கிடையாது. ஆனால் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் காஸ்டியூமிலிருந்து மேக்கப்பிலிருந்து எல்லாவற் றையும் நுணுக்கமாக பார்த்தார். அதனால் நானும் ஆர்வம் காட்டினேன். அவருக்கும் நன்றி.

விக்ரம் பிரபு ஸ்டார் குடும்பத்திலிருந்து வந்தவர்.எப்படி இருப்பாரோ என்ன பேசுவாரோ என்று பயந்தேன். ஆனால் அவர் மிகவும் அன்பாக பழகினார். அவரிடம் பணியாற்றியது அவ்வளவு சவுகரியமாக இருந்தது.

எந்தவொரு பந்தாவும் அவரிடமில்லை.காதல் காட்சிகள் நடிக்கும் போதும் எதுவாக இருந்தாலும் கேட்டுவிட்டுதான் நடிப்பார். விவேக் பிரசன்னா இந்த படத்தில் ஒரு வேடம் செய்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மொத்த படக் குழுவுமே ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள்.

விக்ரம் டே அண்ட் நைட் வேலை செய்திருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பு தந்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்

இவ்வாறு வாணிபோஜன் பேசினார்.

அனைவரையும் பிஆர்ஒ டைமண்ட் பாபு வரவேற்றார்.

முன்னதாக மறைந்த நடிகர்கள் புனித் ராஜ்குமார், விவேக் ஆகியோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Cinematographer Sridhar speech at Paayum Oli Nee Enakku movie press meet

‘இறுதிப் பக்கம்’ இயக்குனரின் முதல் பக்கத்தை தொடங்கிவைத்த கௌதம் மேனன்

‘இறுதிப் பக்கம்’ இயக்குனரின் முதல் பக்கத்தை தொடங்கிவைத்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட உலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம் ‘ என்கிற திரைப்படம்.ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.

இவர் மென்பொருள் பொறியாளர். கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த சினிமா விருப்பத்தின்படி திரையுலகத்திற்கு வந்துள்ளார்.

இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம் மிக்கவர்களைப் படக்குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து, அந்தத் திறமைசாலிகளைப் பக்கபலமாக வைத்துக்கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

அவர் படத்தைப் பற்றி கூறும்போது,

“பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும் .

ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான். இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும் .

ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும்.வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.

அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த ‘இறுதிப் பக்கம்’. ஒரு கொலை நடந்து இருக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள்.

வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக ‘இறுதிப் பக்கம் ‘ இருக்கும் ” என்கிறார் .

மனோ வெ.கண்ணதாசன் மேலும் பேசும்போது…

“ஒரு திரைப்படத்திற்கு முக்கியமாக இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று நல்ல கதை. இன்னொன்று படக்குழு. அந்த படக்குழு மட்டும் சரியாக அமைந்து விட்டால் 70% படம் முடிந்ததுபோல் நம்பிக்கை வந்து விடும் .அப்படி எனக்கு நல்ல திறமைசாலிகள் கொண்ட படக்குழு தேடினேன் அமைந்தது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலு, ஏராளமான குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர் .இப்போது ஏ.ஜி.எஸ்ஸின் ‘நாய் சேகர் ‘ படத்திற்கு அவர் தான் ஒளிப்பதிவாளர்.

இதற்கு இசையமைத்துள்ள ஜோன்ஸ் ரூபர்ட், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பொறியாளன் ‘ மாயன் ‘ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் .

எடிட்டர் ராம்பாண்டியன் ‘ஆண்டவன் கட்டளை ‘, ‘கிருமி ‘ போன்ற படங்களில் உதவி எடிட்டராகப் பணியாற்றியவர்.

இப்படி அனுபவம் உள்ள பலம் வாய்ந்த படக்குழு அமைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஶ்ரீநிவாசன் அவர் நடித்த வெப்சீரிஸ் பார்த்து நான் அவரது திறமையை மிகுந்த திறமைசாலி என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘கள்ளச் சிரிப்பு’ அறிந்திருந்தேன்.

மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து இருக்கிறார்கள்.

நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவன். அதனால் எனது திரைக்கதையை அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் காட்டி பிடித்திருந்தால் மட்டும் பணியாற்றுங்கள் என்ற ரீதியில் தான் அனைவரையும் அணுகினேன்.

கதை மேல் ஏற்பட்ட நம்பிக்கை மட்டுமே அவர்களை பணியாற்றச் சம்மதித்து இந்த படம் உருவாகி இருக்கிறது. என்கிறார்.

‘இறுதிப் பக்கம்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பிடித்துப்போய் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

இதைத் தங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி நெகிழ்ந்து போய் உள்ளது படக்குழு.

படத்தை ஆக்சன் ரியாக்சன் பிலிம்ஸ் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

படம் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக உள்ளது. விரைவில் வெளியாகவுள்ளது.

Director Gautham Menon released Iruthi Pakkam movie first look poster

கமலின் கண்களை குளமாக்கிய ‘ஜெய்பீம்’..; விதை நீங்க போட்டது என சூர்யா நெகிழ்ச்சி

கமலின் கண்களை குளமாக்கிய ‘ஜெய்பீம்’..; விதை நீங்க போட்டது என சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம்.

இந்த படம் இன்று நவம்பர் 2 முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், தமிழ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

1995ல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளனர்.

பழங்குடி இருளர் இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீல் சந்துரு என்பவராக சூர்யா நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் சிறப்பான விமர்சனத்தை நம் தளத்தில் பார்த்தோம்.

இப் படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் படக்குழவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனும் படத்தை பார்த்து தன் பாராட்டை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்…‛‛ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.

கமலின் இந்த பதிவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!! என சூர்யா பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan praises Suriya’s Jai Bhim movie

More Articles
Follows