தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ராஜ்குமார் தான். இவர் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

சந்தன கடத்தல் வீரப்பன் இவரை கடத்தி காட்டிற்கு அடைத்து வைத்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். ராஜ்குமார் மற்றும் வீரப்பன் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.

ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் என்பவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

அவர் நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சில கன்னட திரைப்படங்களில் தன்யா நடித்துள்ளார்.

Rajkumar’s granddaughter to debut in Kollywood

கதைகளோடு காத்திருக்கும் இயக்குனரா நீங்கள்.? கரம் கொடுக்க வருகிறார் இளம் தயாரிப்பாளர் ரீதா

கதைகளோடு காத்திருக்கும் இயக்குனரா நீங்கள்.? கரம் கொடுக்க வருகிறார் இளம் தயாரிப்பாளர் ரீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரீதா ராமுடூ மலேசியா சினிமாவில் புகழ்பெற்றவர்.

இப்போது அவர் தனித்துவமான திரைப்படங்களைத் தயாரிக்க தமிழ் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார் ரீதா.

Mithran Global Sdn Bhd – ன் நிறுவனர் மற்றும் Amma Production Sdn Bhd – ன் இயக்குனர் ஆவார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை மலேசியாவில் வெளியிட்டு வந்த ரீதா.
தற்பொழுது படங்கள் தயாரிப்பதில் முழுக்கவனத்தை செலுத்தியுள்ளார்.

சமீபத்தில் அவர் தயாரித்த திரைப்படம் “அனல் விசால்” மலேசிய பிரபல திரைப்பட சேனலான ஆஸ்ட்ரோ வானவிலில் ஒளிபரப்பப்பட்டது. அனைவராலும் பாராட்டப்பட்டது.

தமிழ் சினிமா தயாரிப்பதில் ஆர்வம்கொண்டவர் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்துவருகிறார். தற்பொழுது நேரடி தமிழ் படங்கள் இரண்டு தயாரிப்பில் உள்ளது.

2021 ஆம் ஆண்டில், ரீத்தா ஒரு சமையல் நிகழ்ச்சியை “பொங்குறோம் திங்குறோம்” என்று தயாரித்துள்ளார், முழு நிகழ்ச்சியும் இந்தியாவில் படமாக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வேடிக்கை, சிரிப்பு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் பல சாரங்கள் உள்ளன.

ரோபோ ஷங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். புகழ், ராமர், போன்ற பிரபல கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னணி நடிகர்களோடு இணைந்து தமிழ் சினிமாவில் தரமான தயாரிப்பாளராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுகிறார்

எனவே சினிமா மற்றும் ஊடகங்களில் தங்கள் கனவுகளை அடைய விடாமுயற்சியுள்ள திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவர் தூணாகப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை …!

A producer and film distributor in Malaysia, Reetha Ramudoo is now set to enter Kollywood as producer.

Founder- director of Mithran Global Sdn Bhd, and director of Amma Production Sdn Bhd, she has successfully distributed Tamil and Telugu movies such as Naa Peru Surya Naa Illu India, Bharat Ane Nenu, Mahanati, Vakeel Saab and others. Her Malaysian Telemovie “Anal Vizhal” was telecast on a leading Malaysian channel.

Reetha has recently stepped into Indian TV with an entertaining India -based fun cooking show, “Pongurom Thingurom” hosted by Robo Shankar.

The young entrepreneur, who values quality content, with good stories, is now prepping towards producing two movies in Kollywood, aiming to work with leading names of the industry. Details are touted to be announced soon.

500 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி காலமானார்

500 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் உடன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் புன்னகை, கண்ணா நலமா, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி.

மேலும் ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் இவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்புக்காக 7 முறைகள் கர்நாடக அரசு விருதுகளை பெற்றிருக்கிறார் இவர்.

இவரது மகனுடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார் ஜெயந்தி.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார் ஜெயந்தி.

பல மூத்த கலைஞர்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் இவர் முதுமை காலங்களில் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஜெயந்தி மரணமடைந்துள்ளார்.

திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Veteran Actress Jayanthi, (76-years) popularly known as ‘Abhinaya Sharade’, passed away due to age-related ailments at Bengaluru. She was known for her notable contribution to the Kannada movies and acted in over 500 movies in Kannada, Telugu, Tamil, Malayalam and Hindi.

Veteran actress Jayanthi passed away

202107261009420776_veteran-actress-jayanthi-passes-away_SECVPF

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. தோழி மரணம்..: போலீசார் வழக்கு பதிவு

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. தோழி மரணம்..: போலீசார் வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

ஈசிஆர் சாலையில் நேற்று நள்ளிரவு ஜூலை 24ல் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.

இவர் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி 28 வயது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற யாஷிகா மது குடித்து இருந்தாரா?, விபத்திற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை யாஷிகா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது சுயநினைவு பெற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actress Yashika Aannand injured and her friend dies in car accident

விஜய் ரசிகர்களை தொடர்ந்து சூர்யா ரசிகர்களின் சூப்பரான செயல்.; குவியும் பாராட்டு

விஜய் ரசிகர்களை தொடர்ந்து சூர்யா ரசிகர்களின் சூப்பரான செயல்.; குவியும் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலை 23ல் நடிகர் சூர்யா தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அப்பட இயக்குனர் பாண்டிராஜ், சத்யராஜ் & நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சூர்யா ரசிகர்களும் அவரது , விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிலையில்சென்னை ஈசிஆர். லிருந்து சென்ட்ரல் வரை நடமாடும் உணவகம் அமைத்து ஏழைகளுக்கு 3 நாட்களாக உணவளித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 1100 நபர்களுக்கு பிரியாணி பார்சல்களை வழங்கி சென்றுள்ளனர்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த வண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவர்களுக்கு முன்பே நடிகர் விஜய் ரசிகர்களும் விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு கொரோனா காலங்களில் உணவளித்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Suriya fans initiated A Food Truck To Serve The Needy

SFC Has Initiated A Food Truck That Carries Food Throughout Chennai City To Serve The Needy♥

This First Of It’s Kind Truck Will Run 15 Hours A Day For 3 Days To Add Upto 46 Hours Cumulatively.

Endrum @Suriya_offl Anna Vazhiyil. https://t.co/IEb8m3di32

விஜய்சேதுபதி-தனுஷ் ரூட்டில் பயணிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதி-தனுஷ் ரூட்டில் பயணிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் தமிழ் சினிமாவுக்கு நிகராக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்கெட் உள்ளது.

அதுபோல் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது. (ஆனால் தெலுங்கு நடிகர்களுக்கு தமிழில் மார்கெட் இல்லை.)

இவர்களைத் தொடர்ந்து விஜய்சேதுபதிக்கும் தெலுங்கில் தற்போது ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

இவரைத் தொடர்ந்து தனுஷூம் 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்சேதுபதி, தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயனும் தற்போது தெலுங்கு சினிமாவுக்குள் நுழையவிருக்கிறாராம்.

விரைவில் தமிழ் & தெலுங்கு உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

இதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 25 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது.

இத்துடன் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ ஆகிய படங்கள் உள்ளன.

Sivakarthikeyan follows Vijay Sethupathi and Dhanush route

More Articles
Follows