தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்.
இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர்.
இவர் தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர்.
இந்த நிலையில் இன்று காலை (பெங்களூரில்) உடற்பயிற்சியின் போது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக தெரிவித்தாராம்.
எனவே அருகில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்த வண்ணம் உள்ளனர்.
அவர் விரைவில் குணமடைய தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Super Star suffers heart attack admitted to hospital in Bengaluru