புதுச்சேரி 30 MLA லிஸ்ட்.: முன்னாள் முதல்வர் ரங்கசாமி தோல்வி.; 6 சுயேட்சைகள் வெற்றி..; CM சீட்டுக்கு ஆசைப்படும் பாஜக.!

pondy election results 2021புதுச்சேரி மாநிலம் (காரைக்கால் மாஹி ஏனாம்) 30 தொகுதிகளைக் கொண்டது.

இம்மாநில சட்டசபைத் தேர்தலில்… காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதே போல என்.ஆர்.காங்கிரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நேற்று மே 2 மூன்று கட்டங்களாக நடைபெற்ற புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.

இதில்… 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவின.

எதிரணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.

5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

என்ஆர். காங். தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ரங்கசாமி.

ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமியை வீழ்த்தியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்.

இந்த நிலையில் ரங்கசாமி முதல்வர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் முதல்வர் பதவிக்கு பிஜேபி ஆசைப்படுகிறதாம்..

வெற்றி பெற்ற MLAக்கள் முதல்வரை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் கரானா தெரிவித்துள்ளார்.

இதனால் யார் முதல்வர்? என்ற குழப்பம் புதுச்சேரி அரசியலில் நீடிக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் விவரம் இதோ…

காங்கிரஸ்:

1. வைத்தியநாதன் – லாஸ்பேட்

2. ரமேஷ் பரம்பத் – மாஹே

திமுக:

1. அனிபால் கென்னடி – உப்பளம்

2. சிவா – வில்லியனூர்

3. நாஜிம் – காரைக்கால் தெற்கு

4. சம்பத் – முதலியார் பேட்டை

5. நாக தியாகராஜன் – நிரவி பட்டினம்.

6.செந்தில் – பாகூர்.

சுயேட்சை வெற்றியாளர்கள்:

1. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அஷோக் – ஏனாம்

2. நேரு – உருளையன்பேட்டை

3. பிரகாஷ் குமார் – முத்தியால்பேட்டை

4. சிவா – திருநள்ளாறு

5. அங்காளன் – திருபுவனை

6. சிவசங்கரன் – உழவர்கரை.

என்ஆர். காங்கிரஸ்..

1. தேனீ.ஜெயக்குமார் – மங்கலம்

2. கே.எஸ்.பி. ரமேஷ் – கதிர்காமம்

3. லட்சுமிகாந்தன் – ஏம்பலம்

4. ராஜவேலு – நெட்டப்பாக்கம்

5. தட்சிணாமூர்த்தி (எ) பாஸ்கர் – அரியாங்குப்பம்

6. ஏ.கே.டிஆறுமுகம் – இந்திரா நகர்

7. ரங்கசாமி – தட்டாஞ்சாவடி

8. திருமுருகன் – காரைக்கால் வடக்கு

9. சந்திர பிரியங்கா – நெடுங்காடு

10. லட்சுமி நாராயணன் – ராஜ்பவன்

பாஜக:

1. ஜான்குமார் – காமராஜ் நகர்

2. ரிச்சர்ட் ஜான்குமார் – நெல்லி தோப்பு

3. நமச்சிவாயம் – மண்ணாடிப்பட்டு

4. கல்யாண சுந்தரம் – காலாப்பட்டு

5. ஏம்பலம் செல்வம் – மணவெளி

6. சாய் ஜெ.சரவணன் – ஊசுடு

Puducherry Election Result 2021

Overall Rating : Not available

Latest Post