புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலை.; ரங்கசாமிக்கு காரை திமுக எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை

புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலை.; ரங்கசாமிக்கு காரை திமுக எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karaikal mla nazeemபுதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

ஆக்சிஜன், மருந்துகள் இருந்தாலும் கூட புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார்.

பொதுவாக நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில்தான அதிக அளவில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் நிலை இருந்தது.

ஆனால், தற்போது புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வந்து முதல்வர் பதவியேற்ற பின்னரும் கூட, புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

துணைநிலை ஆளுநர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளன. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்க ஆளுநர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாக மக்கள் நலன் கருதி தமிழகத்தில் 2 நாட்கள் எல்லாக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது போல புதுச்சேரியிலும் செய்திருக்க வேண்டும்.

தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தை ஒட்டியிருக்கிற பகுதி என்பதால் இங்கும் அதுபோலவே முடிவுகள் எடுக்கப்பட்டு சலுகைகள் அளித்தால் நன்றாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி முதல்வர் விரவில் குணமடைந்து வர இறைவனை வேண்டுகிறேன்.

காரைக்காலைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்றால் புதுச்சேரி ஜிப்மர் அல்லது அரசு மருத்துமனையில் உயிரிழந்துவிட்டால் அவர்களின் உடலைக் காரைக்காலுக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இதற்கென ஒரு தனி மையத்தை உருவாக்கி சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.

முன்பு செய்யப்பட்டது போல, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோரை உரிய கண்காணிப்பு செய்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்.

கரோனா தொற்றாளர்கள் வெளியில் நடமாடும் நிலை உள்ளது. அதைத் தடுக்க அதிக ஊதியம் கொடுத்து அதிகமான அளவில் களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியில் அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கவும், தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ற போட்டிகளையெல்லாம் விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களைக் காக்கும் களப்பணியில் இறங்க வேண்டும்”.

இவ்வாறு காரைக்கால் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ. நாஜிம் தெரிவித்தார்.

Karaikkal MLA Nazim requests CM Rangaswamy

ஊரடங்கில் சூட்டிங் கூடாது.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை..; என்ன செய்வார் ‘அண்ணாத்த’ ரஜினி.?

ஊரடங்கில் சூட்டிங் கூடாது.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை..; என்ன செய்வார் ‘அண்ணாத்த’ ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை (அதிகாலை 4 மணி வரை) முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

எனவே இதனை முன்னிட்டு இன்றும், நாளையும் (மே 8 மற்றும் மே 9) அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ராமசாமி என்ற முரளி தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்… கொரோனா ஊரடங்கு உத்தரவை திரையுலகினர் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வெளியூர்களில் சூட்டிங் நடத்துபவர்கள் உடனடியாக பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

‘அண்ணாத்த’ சூட்டிங்குக்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளர் சங்க உத்தரவை மதித்து ரஜினி உடனே திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கெனவே பலமுறை கொரோவினால் தடைப்பட்டது அண்ணாத்த பட சூட்டிங்.

இம்முறை அண்ணாத்த பட சூட்டிங்கை முடித்துவிட வேண்டும் என சிவா & சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

New trouble for Rajini’s Annaatthe

IMG-20210508-WA0063

மே 8-9 தேதிகளில் 24 மணி நேர பேருந்து வசதி.; ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கூடாது என அமைச்சர் அறிவிப்பு

மே 8-9 தேதிகளில் 24 மணி நேர பேருந்து வசதி.; ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கூடாது என அமைச்சர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dmk raja kannappanமே 10 ஆம் தேதி முதல் 24 வரை கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 10 முதல் திங்கள் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று மற்றும் நாளைய (மே 8 & 9) தேதிகளில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அனுமதியைச் சாதகமாக வைத்துக்கொண்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Bus facility arranged for those going to native says minister

ஊரடங்கில் அம்மா உணவகம் அனுமதி.. டாஸ்மாக் மூடல்.; பாராட்டி விட்டு கோரிக்கையும் வைத்த ஓபிஎஸ்

ஊரடங்கில் அம்மா உணவகம் அனுமதி.. டாஸ்மாக் மூடல்.; பாராட்டி விட்டு கோரிக்கையும் வைத்த ஓபிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OPSகொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது…

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தோற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும்.

எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

மே 10ஆம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்றும் , நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும், பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரம் இயங்குவதே அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மினி கிளினிக்குகளில் எண்ணிக்கையும் அதில் தற்காலிக மருத்துவர்கள் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும் . நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அது சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”

என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

OPS on new lock down 2021 implemented by stalin in tn

மகளிரை தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவச பயணம்..; ஸ்டாலின் அடுத்த உத்தரவு

மகளிரை தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவச பயணம்..; ஸ்டாலின் அடுத்த உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

transgenderநேற்று (மே 7) தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றார்.

அப்போது முதல் கையெழுத்தாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் என்பதை நின்று நம் தளத்தில் பார்த்தோம்.

அதில், அரசு நகர கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் என்ற அறிவிப்பு வந்தது.

இன்று முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

பெண்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த திட்டம்.

மேலும், மகளிரை போல திருநங்கைகளுக்கும் இலவச பயண வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது…

மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.

தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்..

எனவே விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

TN govt will decide on free bus ride for transgenders

பாலசரவணன் வீட்டை அடுத்து ப்ரியா பவானி சங்கர் வீட்டிலும் துக்க நிகழ்வு

பாலசரவணன் வீட்டை அடுத்து ப்ரியா பவானி சங்கர் வீட்டிலும் துக்க நிகழ்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala saravanan priya bhavani shankarஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகர் பாலசரவணன் வீட்டில் ஒரு துக்க நிகழ்வு நடைபெற்றது.

(அன்பு நண்பர்களே…இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்…32வயது…
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்…நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்…நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்…முக கவசம் அணிவீ்ர்…plss)

அவரது தங்கையின் கணவர் (வயது 32) கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக பதிவிட்டு இருந்தார்.

தற்போது நடிகை ப்ரியா பவானி சங்கர்
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா காலமானது குறித்து உருக்கமாக பாசமாக பதிவு செய்துள்ளார்.

அதில்…

“ஒரு வெற்றிகரமான மனிதர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

நான் தாத்தாவோட பிரியம் எல்லாம் இல்ல. சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ 10வது வரை பள்ளி விடுமுறை விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்னு உடையாத ஐட்டம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா கப்சிப் தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை டிவியை இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த டோர் வச்ச டிவி. பெப்சி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த ஷோக்கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்.

இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மெடிக்கல் காலேஜ் பக்கம் போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்ணை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார். எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா என்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு என் அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார்.

இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத எதையும் விட விலைமதிப்பற்றது என்றும், ஒருமுறை நான் அந்த முதியவரால் மதிக்கப்படுவதையும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் உணர்ந்தேன். உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்ணையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க…

இவ்வாறு தாத்தா பற்றிய நிகழ்வுகளை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

இவர் தற்போது ‘ஹாஸ்டல்’ ’அருண் விஜய் -ஹரி படம், ’ருத்ரன்’ ’இந்தியன் 2’ ’பத்து தல’, ‘குருதி ஆட்டம்’ ’ஓ மணப்பெண்ணே’ ’பொம்மை’ ’.. ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Celebs Bala Saravanan and Priya bhavani shankar pens a heartfelt note

More Articles
Follows