தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி – காரைக்காலிலும் +2 பொதுத்தேர்வு ரத்து

n rangaswamyகொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை.

அரசு & தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

இதனையடுத்து சிபிஎஸ்இ +2 இந்தாண்டு பொதுத் தேர்வு ரத்து என அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்த ஆலோசனை சில தினங்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என 60% மக்கள் கருத்து தெரிவித்தாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில் (காரைக்கால் உட்பட) இது குறித்த அறிவிப்பு இல்லை.

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மாஹி (கேரளா) மற்றும் ஏனாம் (ஆந்திரா) பகுதிகள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பகுதிகள் என்றாலும் தமிழக புதுச்சேரி பாடத்திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Pondy govt cancels 12th exam

Overall Rating : Not available

Latest Post