புதுச்சேரி முதலமைச்சரானார் ரங்கசாமி.; துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர் பதவிகளை கேட்கும் பாஜக.!

Rangasamyபுதுச்சேரி மாநிலம் (காரைக்கால் மாஹி ஏனாம்) 30 தொகுதிகளைக் கொண்டது.

இம்மாநில சட்டசபைத் தேர்தலில்… காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதே போல என்.ஆர்.காங்கிரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இதில்… 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

எதிரணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.

5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

என்ஆர். காங். தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ரங்கசாமி.

ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமியை வீழ்த்தியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்.

இதனையடுத்து பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் என்ஆர் காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி.

இந்த நிலையில் இன்று மே 7ல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ரங்கசாமிக்கு தமிழில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி, தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்‍.

புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் வேறொரு தேதியில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

*கூடுதல் தகவல்..:*

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜக நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் என கூறப்படுகிறது.

மே 9ல் துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவியேற்பர் எனவும் சொல்லப்படுகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையேயான உறவு சுமுகமாக உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

AINRC leader N Rangasamy sworn in as Puducherry Chief Minister

Overall Rating : Not available

Latest Post