தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.
தமிழகமே போராட்ட களத்தில் உள்ள போது ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் பல கடுமையான கட்டுபாடுகளுடன் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த போது சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்ட போது அந்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது… ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.
இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.
சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Public should not attack Police They should be punished says Rajini