ரஜினி-கமலுக்கு ஆதரவு; மகேந்திரன் நடித்துள்ள பட விழாவில் தாணு பேச்சு

ரஜினி-கமலுக்கு ஆதரவு; மகேந்திரன் நடித்துள்ள பட விழாவில் தாணு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Kalaipuli Thanu welcomes Rajini and Kamal political Entryகுளோபல் பிலிம்ஸ் சார்பில் தொழிலதிபர் டில்லி ஆர்.சிவா தயாரித்துள்ள படம் ‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்’.

மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புதுமுகம் திவ்யா ஹீரோயி-னாக நடிக்கிறார்.

இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர், ‘லொள்ளு சபா’ மனோ¬கர், மூர்த்தி, ஈ. ராமதாஸ், நெல்லை சிவா, டில்லி ஆர். சிவா, முத்துக்¬காளை, சுப்புராஜ், டவுட் செந்தில், மிப்பு, கலக்கல் சத்யா ஆகியோ¬ரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்¬கதை, வசனம் எழுதி ஏ.ஆர். சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலைப்புலி தாணு, கலைப்புலி ஜி.சேகரன், ஜாக்குவர் தங்கம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

கலைப்புலி ஜி. சேகரன் பேசும்போது…

திரையுலகில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் அதை தடுக்காமல் ரஜினி, கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு செல்ல நினைக்கிறேன் என பேசினார்.

அதற்கு அடுத்து பேசிய கலைப்புலி தாணு அவர்கள் கூறியதாவது…

அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் கலைத்துறையில் இருந்துதான் அரசியலுக்கு வந்தனர்.

அவர்கள் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்தனர். அதுப்போல் நம் துறையில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும்.

ரஜினி, கமல் அவர்கள் அரசியலுக்கு வந்து நல்லாட்சியை கொடுக்க விரும்புகின்றனர். அதை நாம் வரவேற்க வேண்டும்” என பேசினார்.

Producer Kalaipuli Thanu welcomes Rajini and Kamal political Entry

Ithukkuthana Naan Appave Sonnen

*காமராஜர் கனவுக் கூடம்* பேனரில் 10 படங்களை தயாரிக்கும் கரிகாலன்

*காமராஜர் கனவுக் கூடம்* பேனரில் 10 படங்களை தயாரிக்கும் கரிகாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karikalan going to produce 10 movies in Kamarajar Kanavuk Kudam bannerகஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்.

அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்.

அதில் ‘ரமணா’, ‘அரவான்’, ‘அடிமைசங்கிலி’, ‘நிலாவே வா’, ‘கருப்பி’, ‘ரோஜா’ படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.

சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.

தற்போது மீண்டும் கலைத்துறையில் கால் பதிக்கிறார்.

காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

இதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்.

நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு ஆசை.

என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்” என்றார் நடிகர் கரிகாலன்.

இவர் தயாரித்து நடிக்கும் முதல் படத்திற்கு பெருந்தலைவன் என பெயரிட்டுள்ளார்.

Karikalan going to produce 10 movies in Kamarajar Kanavuk Kudam banner

*வினை அறியார்* வெற்றி பெற்றால் என் குடும்பம் இணையும் – காத்திருக்கும் கமலி

*வினை அறியார்* வெற்றி பெற்றால் என் குடும்பம் இணையும் – காத்திருக்கும் கமலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Heroine Kamali emotional speech at Vinay Ariyar audio launchநாகை பிலிம்ஸ் கே.டி.முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் வினை அறியார் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்டன. பாடல்களுக்கான இசையை அன்பரசுவும், பின்னணி இசையை தஷியும் அமைத்துள்ளனர்.

மூத்த இயக்குநர்- நடிகர் மனோஜ்குமார், சண்முகசுந்தரம், பாடலாசிரியர் விவேகா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

“என் அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எனக்குப் பிடிக்காத என்னால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட என் பாட்டி தான் எனக்கு உதவியாக இருந்தார்.

இந்த மேடையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது அவரது வீட்டில் தான் இருக்கின்றேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் என் பெற்றோரைப் பார்ப்பேன்.

நான் நாயகியாக நடிப்பதில் என் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை. இந்தப்படம் வெற்றிபெற்று என் குடும்பம் ஒன்று சேரவேண்டும். ஹீரோ என்னைவிடச் சின்னப்பையனா தெரிகின்றாரே என்று தயங்கினேன்.

ஆனால், ஸ்கிரீனில் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது..” என்று அறிமுக நடிகையாக கமலி பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

“வினை அறியார் என்று மிகவும் அழகான வார்த்தையைத் தலைப்பாக வைத்திருக்கின்றார், கே.டி.முருகன்.

தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகள் தான் வினை. அதை அறியாத விடலைப்பசங்களான நாயகன் நாயகியர் செய்யும் செயல்கள் தான் படம் என்று ஊகிக்க முடிகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்..” என்றார் விவேகா.

“தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் நான், செயலாளர் நீங்க. ஆகவே, நான் இயக்கித் தயாரித்திருக்கும் படத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று வெள்ளந்தியான ஒரு அதிகார தோரணையில் அழைத்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது.

இதுபோன்ற எளிமையான கலைஞர்களின் படைப்புகளுக்கு எங்கள் சங்கம் என்றும் துணை நிற்கும்..” என்றார் மனோஜ்குமார்.

“25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக இந்த மேடையில் நிற்கின்றேன். 2012 இல் வங்கக்கரை என்கிற படத்தை எடுத்தேன். போதிய முன் அனுபவம் இல்லாததால், அதனைச் சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை.

ஆனால், அதில் கிடைத்த பல அனுபவங்களுடன் வினை அறியார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கின்றேன். ரசிகர்களுக்குப் போர் அடிப்பது போல ஒரு காட்சி கூட இதில் இருக்காது. ஆகஸ்டு 24 ஆம் தேதி இப்படத்தைத் திரையிடவுள்ளேன்..” என்றார் கே.டி.முருகன்.

கோலிசோடா புகழ் முருகேஷ். என்னை அறிந்தால், தனி ஒருவன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜாக், உதயராஜ், குரு, கமலி என்று விடலைப் பசங்களுடன் சிசர் மனோகர், நிர்மலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு அன்பரசு இசையமைத்திருக்கிறார்.

பின்னணி இசையை தஷி அமைத்திருக்கிறார். ரஞ்சித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பன்னீர் செல்வம் படத்தொகுப்பை உருவாக்கி இருக்கிறார். தயாரிப்பு, இயக்கம் – கே.டி.முருகன். மக்கள் தொடர்பு – சரவணன்.

Heroine Kamali emotional speech at Vinay Ariyar audio launch

Heroine Kamali emotional speech at Vinay Ariyar audio launch

தமிழ் பேசும் ராஜஸ்தான் பெண் ஐராவை அறிமுகம் செய்யும் யுரேகா

தமிழ் பேசும் ராஜஸ்தான் பெண் ஐராவை அறிமுகம் செய்யும் யுரேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajasthani girl Aira entering in Kollywood in Kaatupaiya Sir indha Kaaliஊடகவாதியான யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காட்டுப்பய சார் இந்த காளி.

ஜெய்வந்த் நாயகனாக நடித்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

பல தமிழ் நடிகைகள் நடிக்க கேட்டும், எவரும் முன்வரவில்லை என்பதால் ராஜஸ்தானில் இருந்து ஐரா என்ற பெண்ணை இந்த படத்தில் அறிமுகம் செய்கிறார் யுரேகா.

ஐரா இப்படம் குறித்து கூறியதாவது…

‘காட்டுப்பய சார் இந்த காளி படமே தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியது தான்.

டைரக்டர் யுரேகா தேடியபோது தமிழ் பேசும் தமிழ்பெண்கள் யாரும் நடிக்க முன்வரவில்லை.

நான் பார்ப்பதற்கு தமிழ் பெண்ணை போல இருப்பதால் என்னை தேர்ந்தெடுத்தாராம்.

என் அம்மா ராஜஸ்தானி என்றாலும் நான் சென்னையில் தங்கியிருக்கிறேன். எனவே நன்றாக தமிழ் பேசுவேன். 2014 மிஸ் தென் இந்தியா போட்டியில் தமிழ்நாட்டு சார்பில் ஜெயித்தேன்’ என்றார்.

Rajasthani girl Aira entering in Kollywood in Kaatupaiya Sir indha Kaali

உலகளவில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய்; விருதை வெல்வாரா?

உலகளவில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய்; விருதை வெல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay is only Indian for two best actor nominations in International awardsவிஜய், அட்லி, ஏஆர். ரஹ்மான் ஆகியோரது கூட்டணி உருவாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் மெர்சல்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தன் 100-வது படமாக தயாரித்தது.

இப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கினாலும் இந்தியளவில் மாபெரும் ஹிட்டடித்தது.

இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அதற்காக அந்த கமிட்டியின் இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதிக வாக்குகள் பெற்று இதில் வெற்றி பெறும் நடிகரே சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay is only Indian for two best actor nominations in International awards

International Best actor vijay

 

நரகாசூரனுக்காக அனுராக் காஷ்யப்பை காக்க வைத்த கார்த்திக் நரேன்

நரகாசூரனுக்காக அனுராக் காஷ்யப்பை காக்க வைத்த கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Anurag Kashyap is waiting for Karthick Narens Naragasooranதமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘துருவங்கள் 16′.

இதனையடுத்து இதே இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.

ரோன் ஈதன் யோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் அரவிந்த் சாமி, இந்ரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில்,இப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

இந்த தகவலை கார்த்திக் நரேன் தன் ட்விட்டரில் தெரிவிக்க, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், “எப்போது படம் வெளியாகும்? உங்களுடைய ‘துருவங்கள் 16’ படத்திற்கு நான் பெரிய ரசிகன்” என பதிலளித்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்த கார்த்திக் நரேன், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.

Why Anurag Kashyap is waiting for Karthick Narens Naragasooran

More Articles
Follows