என்னப்பா நடக்குது… சிம்பு மீது புகார் அளிக்கவில்லை என ஞானவேல் ராஜா மறுப்பு

என்னப்பா நடக்குது… சிம்பு மீது புகார் அளிக்கவில்லை என ஞானவேல் ராஜா மறுப்பு

STR - Gnanavel rajaஇயக்குனர், பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.

சிம்பு என்பதை விட இவர் வம்பு நாயகன் என்றே அழைக்கிறார்கள்.

கால்ஷிட் சொதப்பல், காதல் முறிவு என பல சர்ச்சைகள் இவர் மீது உள்ளன.

இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிம்பு நடிக்கும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என கூறப்பட்டது.

ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மப்டி ரீமேக் சூட்டிங் விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கும்கி நாயகிக்கு கல்யாணம்..; மாப்பிள்ளை யாரோ.?

கும்கி நாயகிக்கு கல்யாணம்..; மாப்பிள்ளை யாரோ.?

Actress lakshmi menonமலையாளத்தில் பிரபலமான லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் பல படங்களில் நடித்து வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

சில காலம் நடிப்பை விட்டு படிக்க போவதாக அறிவித்தார்.

தற்போது அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து இருக்கிறார்களாம்.

எனவே மாப்பிள்ளை யார்? என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.

புட்பால் போட்டி.. பிகில் புரோமோசன் பட்டைய கிளப்புது

புட்பால் போட்டி.. பிகில் புரோமோசன் பட்டைய கிளப்புது

Bigil Vijayஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

எனவே படத்தை புரோமோட் செய்யும் வகையில் கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

SJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் !

SJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் !

SJ Suryaசமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா.
இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார்

இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், இன்று
நவம்பர் 9ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இது பற்றி SJ சூர்யா…

இன்று எனது அடுத்த பயணம் நண்பர், தொழிலதிபர் சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில் , பிரியா பவானி சங்கர் இணைய , யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது SJ சூர்யா ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 21 புதுச்சேரியில் தேவாவின் பிரம்மாண்ட இசை கச்சேரி

டிசம்பர் 21 புதுச்சேரியில் தேவாவின் பிரம்மாண்ட இசை கச்சேரி

music director devaரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, கமல் நடித்த அவ்வை சண்முகி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா.

மேலும் அஜித், விஜய் முதல் பிரபலமான நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

கானா பாடல்களை திரையில் கொண்டு வந்தற்கு இவரின் பங்கு முக்கியமானது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்ரீகாந்த் தேவா, இயக்குநர்கள் பேரரசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது…

“வரும் டிசம்பர் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் லைவ் மியூசிக் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் என்னுடைய பாட்டுக்கு இசை கருவிகளை இசைத்தவர்கள் இசையமைக்கவுள்ளனர்.

நான் வெளி நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்துள்ளேன். இங்கு இது தான் முதல்முறை.. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப இசை சிறப்பாக உள்ளது.

ரஜினி அரசியல் குறித்து நான் சொல்ல எதுவுமில்லை. அது அவர் விருப்பம். என் பாடல்களை அனுமதி பெறுகிறார்களா என்று கேட்கிறார்கள். நான் பாடட்டும் என்று தான் சொல்கிறேன்.” என்றார்.

கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

oomai vizhigalபழைய படத்தலைப்புகளை புதிய படத்திற்கு வைப்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் ‛ஊமை விழிகள்’ என்ற படமும் இணைந்துள்ளது.

32 ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் வெளியான இப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க ஆபாவாணன் தயாரிக்க விஜயகாந்த், கார்த்திக் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பிறகு தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு சினிமாவில் பிரபலமானார்கள்.

தற்போது இதே பெயரில் உருவாகவுள்ள படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க வி.எஸ் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய காஸிப் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல், யங் மங் சங் படங்கள் வெளியாக தயாராகவுள்ளது.

மேலும் சல்மான்கான், சுதீப், சோனாக்ஷி சின்கா நடிப்பில் ஹிந்தியில் தபாங் 3 என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

More Articles
Follows