தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இனி திருட்டு விசிடிகள் மற்றும் இணையங்களில் படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறித்தார்.
இந்நிலையில் இந்த புதிய அணியின் பதவியேற்பு விழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இந்த விழா ரஜினிக்கு சொந்தமான சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவிற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் அவர்களின் குடும்பத்தோடு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் விஷால்.
மேலும், திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குனர் மிஷ்கின் செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.
Producer council new elected team function will be held in Ragavendra Mandapam