24 மணி நேரத்தில் 100M+ பார்வைகள்.; சரவெடியாய் ‘சலார்’ டீசர்.!

24 மணி நேரத்தில் 100M+ பார்வைகள்.; சரவெடியாய் ‘சலார்’ டீசர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சலார்’.

இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

சலார்

‘சலார்’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சலார்’ திரைப்படத்தின் டீசர் 06-07-2023 தேதி காலை 5.12 மணிக்கு படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகிய 2 நாட்களில் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Salaar – Teaser

Prabhas’ Salaar Teaser Crosses 100 Million Views

ஓர் ஆணின் நேசத்திற்குரிய தருணங்களை கொண்ட ‘கைலி’ பாடல்

ஓர் ஆணின் நேசத்திற்குரிய தருணங்களை கொண்ட ‘கைலி’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓர் ஆணின் வாழ்வில் கைலி எனும் ஆடையானது, சோதனைகள், வெற்றிகள் மற்றும் அவனுடைய நேசத்துக்குரிய தருணங்களை உள்ளடக்கி, அவன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது.

இந்த உணர்ச்சிகளின் கோர்வையை, இசையமைப்பாளரும் பாடகருமான கார்த்திக் திறம்பட இப்பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகள், கைலியுடனான ஒரு ஆண்மகனின் வாழ்நாள் பயணத்தின் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

ஒரு அழுத்தமான மற்றும் உற்சாகமான இசை அனுபவத்தை வழங்கும் கைலி பாடல், தற்போது பா மியூசிக் யூடியூப் தளத்தில் காணக் கிடைக்கிறது.

YouTube 🔗 ➡️

Kaili An indie song by Gautham Menon, Karthik & Karky

YouTube 🔗 ➡️ https://youtu.be/8wJschH7YzA

சந்தானம் கொடுக்கும் ‘கிக்’..; சென்சார் என்ன கொடுத்தாங்க தெரியுமா.?

சந்தானம் கொடுக்கும் ‘கிக்’..; சென்சார் என்ன கொடுத்தாங்க தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, மன்சூர் அலி கான், செந்தில், பிரசாந்த் ராஜ், மனோபாலா, தம்பி ராமையா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ளது.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘கிக்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Santhanam’s kick movie certified U/A

‘மாமன்னன்’ பட டிரைலரை வெளியிடும் இந்திய சினிமாவின் பிரபலம்

‘மாமன்னன்’ பட டிரைலரை வெளியிடும் இந்திய சினிமாவின் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நாயகுடு

‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘நாயகுடு’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயகுடு

udhayanidhi’s maamannan telugu movie trailer releasing today

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘டிமான்டி காலனி 2’ பட சிறப்பு வீடியோ அப்டேட்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘டிமான்டி காலனி 2’ பட சிறப்பு வீடியோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

arulnidhi’s demonte colony special video releasing

உங்களுக்கு தான் வேலை அடுத்தவனுக்கு இல்லையா.? உங்களுக்குன்ன ரத்தம்.. அடுத்தவனுக்கு தக்காளி சட்னியா.? மொமண்ட்

உங்களுக்கு தான் வேலை அடுத்தவனுக்கு இல்லையா.? உங்களுக்குன்ன ரத்தம்.. அடுத்தவனுக்கு தக்காளி சட்னியா.? மொமண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது 32 ஆவது படத்தின் படப்பூஜை ஜூலை 5ஆம் தேதி சென்னை வானகரம் பகுதியில் உள்ள பி ஜி எஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

‘ஜீனி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பூஜையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் அர்ஜுனன் ஜூனியர், நாயகிகள் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தேவயானி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த பூஜை விழா காலை 8:30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்னால் இந்த பூஜை தொடங்கப்பட்டது.

பொதுவாக படப்பூஜை என்றாலே நல்ல நேரம் பார்த்து தொடங்குவார்கள் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவரும் 8:30 – 9:00 மணிக்குள் ஆஜராகிவிட்டனர்.

ஆனால் ஜெயம் ரவி கீர்த்தி செட்டி ஆகியோர் கிட்டத்தட்ட 10.30 மணி அளவில் மட்டுமே அந்த தளத்திற்கு வந்தனர். ஆனாலும் விழா தொடங்க 11 மணி ஆனது.

இந்த ‘ஜீனி’ படப்பூஜை மேடையில் பேசிய ஒருவர் கூட தாமதத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பூஜை முடிந்த பின்னர் ரவி புறப்பட்டு செல்லும்போது ரவியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள சிலர் அனுமதி கேட்டனர்.

அதற்கு அவர் “எனக்கு வேலை இருக்கு.. என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ‘இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்..’ என்று கூட கூறி சென்று இருக்கலாம்.. ஆனால் தனக்கு மட்டுமே வேலை இருப்பது போல தோரணையில் கூறிவிட்டு உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சரிதான்.. நீங்கள் பிசியான நடிகர் தான். உங்களுக்கு 1000 வேலைகள் இருக்கும்.

ஆனால் உங்களுக்காக பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடக சமூக வலைத்தளங்கள் இணையதளங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 300+ மேற்பட்டோர் 3 மணி நேரமாக காத்திருந்தார்களே அது உங்களுக்கு தெரியவில்லையா ஜெயம் ரவி.?

ஒரு 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் தாமதம் என்றால் கூட பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக இத்தனை பேரை காக்க வைத்தது எந்த விதத்தில் நியாயமாகும்.?

உங்கள் ஒருவருக்காக இத்தனை பேரை நீங்கள் காக்க வைத்தது மட்டும் நியாயமா.? உங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கிறதா? அவர்களுக்கு வேற வேலை இல்லையா.?

இனியாவது உங்கள் நேரத்தை போன்று மற்றவர்கள் நேரத்தையும் கருத்தில் கொண்டு நடந்து கொண்டால் இனி எல்லாம் ஜெயமே..!

Please respect others timing too Jayam Ravi

More Articles
Follows