நடிகர் பிரேம்ஜி அமரன் இசையில் ERROR

நடிகர் பிரேம்ஜி அமரன் இசையில் ERROR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திலகா ஆர்ட்ஸ்’ சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் ‘Error’ படத்தை அறிமுக இயக்குனர் ஜி. பி. கார்த்திக் ராஜா இயக்குகிறார்.

இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் எடிட்டராகவும் பணியாற்றினார்.

நாயகனாக ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்பட நாயகன் கார்த்தீஸ்வரன் நடிக்கிறார்.

நாயகியாக இனியா நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசை பிரேம்ஜி அமரன். ஒளிப்பதிவு விவேக்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.

Premgi Amaren to compose music for Error

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா. : 15 தலைவர்களுடன் இணையும் கருணாநிதி படம்.: திறந்து வைக்கும் ஜனாதிபதி.; ரஜினிக்கு அழைப்பு

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா. : 15 தலைவர்களுடன் இணையும் கருணாநிதி படம்.: திறந்து வைக்கும் ஜனாதிபதி.; ரஜினிக்கு அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அன்று சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது.

1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஆட்சியின் போது, சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது.

சட்டமன்றம் 100 ஆண்டுகள் நினைவுப்படுத்தும் வகையில் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது

இந்த விழாவையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுகிறது.

இன்று (02/08/2021) மாலை 05.00 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான விழா நடைபெறும்.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவை அரங்கில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 15 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

16வதாக, தமிழ்நாட்டில் முதல்வராக 5 முறையும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய கருணாநிதியின் முழுஉருவப்படம் திறக்கப்படுகிறது.

இன்று கலைஞரின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

விழா முடிந்ததும், மீண்டும் ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசுத் தலைவர், இரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்

இந்த விழாவில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

President Ram Nath Kovind will unveil the portrait of former Chief Minister late M. Karunanidhi at the Legislative Assembly

ரேஷன் கடைகளில் அரிசி எண்ணெய் உணவு தானியங்கள் இலவசம்.; ஆதார் கார்டு அவசியமா.?

ரேஷன் கடைகளில் அரிசி எண்ணெய் உணவு தானியங்கள் இலவசம்.; ஆதார் கார்டு அவசியமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாவது…

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையின் திட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளி/ஓணம் பண்டிகை காலங்களில் இலவசமாக சர்க்கரை விநியோகம் செய்யப்படும்.

அதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-ன் கீழ் உணவு மானியம், புதுச்சேரியில் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள/அந்தியோதயா அன்ன யோஜனா (BPL/AAY) உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் பண்டிகை பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.

இந்த திட்டங்களின் கீழ் பயனடைய ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது அந்த நபருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் வரை- புகைப்படம் ஒட்டப்பட்ட மாற்று ஆவணங்களை அளிப்பதற்கான குடிமைப்பொருள் வழங்கல் துறையின் முன்மொழிவிற்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Is Aadhaar card mandatory for to get food products from ration shop in Pondy

‘வலிமை’ சிங்கிள் சாங் ரிலீஸ்.: ஆகஸ்ட் 2ல் அஜித் ரசிகர்களுக்கு இரவு விருந்து

‘வலிமை’ சிங்கிள் சாங் ரிலீஸ்.: ஆகஸ்ட் 2ல் அஜித் ரசிகர்களுக்கு இரவு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் பிரமாண்டமான படம் ‘வலிமை’.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான வலிமை மோசன் போஸ்டரில் பின்னணி இசையை தெறிக்கவிட்டுருந்தார். இது யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்ட போதிலும் வெளிநாட்டில் சில காட்சிகளை படமாக்க விரைவில் ‘வலிமை’ படக்குழுவினர் ஃபாரீன் பறக்க உள்ளனர்.

அந்த பணிகளை முடித்துவிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 2 இரவு 9 – 10 மணிக்குள் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிடவுள்ளனர்.

Valimai single release update is here

சாதிய பிரச்சனை கதைக்களத்தில் இணையும் இளையராஜா விஜய் பிரகாஷ் & ’96’ புகழ் கௌரி

சாதிய பிரச்சனை கதைக்களத்தில் இணையும் இளையராஜா விஜய் பிரகாஷ் & ’96’ புகழ் கௌரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

‘உலகம்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை “உலகம்மை”. பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

இயக்கம் – விஜய் பிரகாஷ்
தயாரிப்பு – V.மகேஷ்வரன் (SVM புரொடக்‌ஷ்ன்ஸ்)
இசை – இசைஞானி இளையராஜா
கதை (நாவல்) – சு.சமுத்திரம்
ஒளிப்பதிவு – K.V.மணி
வசனம் – குபேந்திரன்
திரைக்கதை – சரவணன்
கலை – வீரசிங்கம்
படத்தொகுப்பு – ஜான் அப்ரஹம்
உடைகள் – ஜெயபாலன்
ஒப்பனை – பாரதி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Gouri G Kishan’s new film is titled Ulagammai

‘அண்ணாத்த’ அப்டேட்..: ரஜினிக்கு பிறகு மீனா..; ரசிகர்கள் ஆனந்தம்

‘அண்ணாத்த’ அப்டேட்..: ரஜினிக்கு பிறகு மீனா..; ரசிகர்கள் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலில் நடந்து முடிந்தது.

இதனையடுத்து தன் டப்பிங் பணியை ரஜினிகாந்த் முடித்து கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது மீனா தன்னுடைய பகுதி டப்பிங் பணியை செய்துவருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராபில் பதிவு செய்துள்ளார்.

மீனாவுடன் இயக்குனர் சிவாவும் அருகில் உள்ளார்.

முத்து, வீரா படங்களுக்கு பிறகு நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீனா நடித்து வருவதால் அவர்களது ரசிகர்கள் இந்த சூப்பர் ஜோடியை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

Meena completed her dubbing for Annatthe

More Articles
Follows