ஷாருக் – தீபிகா இணைந்த ‘பதான்’ படத்திற்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு.; காவி கவர்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஷாருக் – தீபிகா இணைந்த ‘பதான்’ படத்திற்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு.; காவி கவர்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் ஷாருக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள படம், ‘பதான்’.

சென்னை எக்ஸ்பிரஸ் ஜோடி இந்த படத்திலும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான நிலையில் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

அதன்பிறகு தான் வட இந்தியாவில் சர்ச்சை எழுந்தது.

நாயகன் ஷாருக், பச்சை நிற உடை அணிந்தும் நாயகி தீபிகா காவி நிற பிகினியில் கவர்ச்சியாக உடையணிந்து இருந்தனர்.

எனவே காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தைரியமாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அயோத்தியின் ஹனுமன் காரி மட தலைவர் ராஜு தாஸ் என்பவர் தன் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளார்.

அவர் ‘‘இந்த காவி உடை கவர்ச்சி மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பதான்’ எங்கெங்கு திரையிடப்படுகிறதோ அந்த தியேட்டர்களை தீயிட்டு கொளுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ பட வசூலை முறியடிக்காத ‘அவதார் 2’

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ பட வசூலை முறியடிக்காத ‘அவதார் 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2009ல் உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்த இந்த படம் அப்போதே ரூ.1000 கோடி செலவில் உருவானது என கூறப்பட்டது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை (அவதார் 2) உருவாக்கிய ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை நேற்று டிசம்பர் 16ல் உலகம் முழுவதும் திரையிட்டு இருந்தார்.

கிட்டத்தட்ட 160 மொழிகளில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக இந்த படம் ரிலீசானது.

3டியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வசூல் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அளவில் மட்டும் ரூ. 50 கோடியை ஒரே நாளில் பெற்றுள்ளதாகவும் கனடா மற்றும் அமெரிக்காவின் ஒரே நாளில் ரூ. 130 கோடி வசூலித்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அதே சமயம் 2019ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படத்தின் ரூ.65 கோடி வசூலை இந்தியாவில் அவதார் 2 முறியடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

ஒரே திரையில் ஒரே நேரத்தில் 2 கதைகளை சொல்லும் ‘பிகினிங்’

ஒரே திரையில் ஒரே நேரத்தில் 2 கதைகளை சொல்லும் ‘பிகினிங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆசியாவில் முதல் முயற்சி!
“பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள், ரசிகனை வியப்பில் ஆழ்த்தும் புதுமையான சினிமா “பிகினிங்” Beginning, 40 நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம்.

Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘பிகினிங்’.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது.

ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

முதல் முறையாக, வித்தியாசமான, புதுமையான அனுபவம் எனும் வார்த்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லப்படும் வார்த்தைகளாகும், ஆனால் இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தத்தை தந்து, முதல் முறையாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது ‘பிகினிங்’ பட டிரெய்லர்.

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள்.

ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.

இந்த வித்தியாசமான படத்தை டைரக்டர் என்.லிங்குசாமி உலகமெங்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

ஏற்கனவே மஞ்சப்பை, கோலிசோடா, சதுரங்க வேட்டை போன்ற படங்களை வெளியிட்டு வெற்றி பெற்று இதன் தொடர்ச்சியாக இந்த பிகினிங் படத்தை வெளியிடுகிறார்கள்.

நடிகர்கள்

வினோத் கிஷன்
கௌரி G கிஷன்
சச்சின்
ரோகிணி
லகுபரன்
மகேந்திரன்
சுருளி
KPY பாலா

தொழில் நுட்ப குழு

எழுத்து இயக்கம் : ஜெகன் விஜயா
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
ஒளிப்பதிவு : வீரகுமார்
எடிட்டர்: CS பிரேம்குமார்
கலை : K.V.முருகமணி
தயாரிப்பு நிர்வாகி: மாரியப்பன் கணபதி
குரல் பதிவாளர்: தீலீபன் இரணியன் ஆடியோகிராபி: டோனி J
மிக்சிங் : ப்ளாக் அண்ட் ஒயிட்
ஸ்டுடியோ: ஃபயர்பாக்ஸ் ஸ்டுடியோ
வண்ணம்: ராஜேஷ் J
VFX: முகமது அக்ரம்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு: Lefty Manual Creations வெளியீடு: மாஸ்டர்ஃபீஸ்
தயாரிப்பாளர்: விஜயா முத்துசாமி
இணை தயாரிப்பாளர்: பிரபாகரன் நாகரத்தினம், சுப்ரமணி பிரபாகரன், கோபி அண்ணா, பொன்னி பிரபு, அன்பரசி பாபு.

Here is the Official Tamil Trailer of BEGINNING

BEGINNING – OFFICIAL TRAILER

தங்கர் பச்சான் – பாரதிராஜா – எஸ்ஏசி – கௌதம் கூட்டணியில் ‘அருவி’ நாயகி

தங்கர் பச்சான் – பாரதிராஜா – எஸ்ஏசி – கௌதம் கூட்டணியில் ‘அருவி’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும்.

தற்பொழுது தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இதில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது.

தற்பொழுது இப்படத்தின் மைய பெண் பாத்திரத்தில் #அருவி புகழ் அதிதி பாலன் நடிக்கிறார்.

இக்கதையின் ஆணி வேரான இப்பாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளிலிருந்தும் நடிகையைத் தேர்வு செய்ததில் இறுதியாக அதிதி பாலன் மிகவும் பொருத்தமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சவாலான இப்பாத்திரத்தில் தனது மெருகேறிய நடிப்பின் மூலம் படைப்புக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன்.”
கதையின் வலுவான ஆழமான பாத்திரத்தில் அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கூறினார்.

பாரதிராஜா உடல் நிலை சரியாகி இப்பொழுது சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்றுவருகிறது.

டிசம்பர் 20ம் தேதி முதல் இராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முடிவடைய உள்ளது.

*Cast* :-

Bharathi Raja
Aditi Menon
Gowtham Menon
Yogi Babu
Mahana sanjeevi
SA Chandra Sekhar
RV Udhya Kumar
Prymid Natrajan
Delhi Ganeshan

*Technicans :-*
Director: Thangar Bachan
Music: GV.Prakash
Lyrics: Vairamuthu
Cinematographer: N.K.Ekhambaram
Art director:Michael
Set Design: Muthuraj
Executive Producer: Varagan
PRO : Johnson
Production: VAU media entertainment
Producer: D.Veerasakthi

அந்தோணிதாசன் சிறந்த மனிதர்.. அவர் ரசிகைகளில் நானும் ஒருத்தி – பாடகி சித்ரா

அந்தோணிதாசன் சிறந்த மனிதர்.. அவர் ரசிகைகளில் நானும் ஒருத்தி – பாடகி சித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

இதன் துவக்கவிழாவில் பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா பேசுகையில்…

அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர்.

தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக்கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

வழக்கமாக இதுபோல நிகழ்ச்சிகளில் நிறைய பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால் அனைத்து விருந்தினர்களும் உற்சாகமாக பாடி அசத்த, கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.

சின்னக்குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” பாடலைப் பாட அமைதியாக கேட்டு ரசித்தவர்கள் பாடி முடித்ததும் கைத்தட்டி கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.

கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் “மொச்சக்கொட்ட பல்லழகி” பாடலைப்பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, “நாடோடி பாட்டுக்கு” பாடல் வெளியிடப்பட்டது.

விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக்கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

#FolkMarleyRecords #AnthonyDaasan

வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கு வெளிச்சம் காட்டும் அந்தோணிதாசன் – சீனு ராமசாமி

வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கு வெளிச்சம் காட்டும் அந்தோணிதாசன் – சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும், நிறுவனம் உதவிசெய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம்.

ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் துவக்கவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அடையாறு இசைக்கல்லூரி முன்னாள் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கிய விழாவில் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் சிஇஓ முருகன் மந்திரம் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியை கவிதா மற்றும் கேபிஒய் பாலா தொகுத்து வழங்கினார்கள்.

இயக்குனர் சீனுராமசாமி, சின்னக்குயில் சித்ரா, இசையமைப்பாளர் பாடகர் பிரதீப்குமார், மீடியா மேஷன் நிறுவனத்தின் ரௌஃபா மற்றும் பிரதீபா, கானா பாலா, மாலதி லஷ்மண், கிடாகுழி மாரியம்மாள், நடிகர் அருள்தாஸ், பாடகர்கள் வி.எம். மகாலிங்கம், ஆந்தைகுடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் , வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணி, கனகராஜ், முகேஷ், லெஷ்மி சந்ரு, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட “”நாடோடிப் பாட்டுக்கு“” பாடலை சிறப்பாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் மற்றும் அவரது குழுவினர், பாடலாசிரியர் லாவரதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

பத்திரிகைத் தொடர்பு பணியை பிஆர் ஓ குணசீலன் சிறப்பாக செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை சின்னா மற்றும் ராஜா பக்கிரிசாமி சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில்…

அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன், தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னைப்போல கலைஞர்களை கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குறியது.

எனது ஆதரவு எப்போதும் அந்தோணிதாசனுக்கு உண்டு, அந்தோணிதாசன் மிகப்பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என்று பேசினார்.

More Articles
Follows