வரிசைக் கட்டும் பிரபுதேவா படங்கள்.; அடடா.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

வரிசைக் கட்டும் பிரபுதேவா படங்கள்.; அடடா.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் டைரக்சன்.. கோலிவுட்டில் ஆக்டிங் என பிசியாக வலம் வருகிறார் பிரபுதேவா.

இத்துடன் கோலிவுட்டில் சில நேரங்களில் டைரக்சனிலும் ஆர்வம் காட்டுவார்.. படங்களுக்கு நடனம் அமைத்து கொடுப்பதிலும் கலக்குவார்.

தமிழில் பிரபுதேவா நாயகனாக நடித்து கடைசியாக ரிலீசான படம் ‘தேவி 2’.

இதன்பின்னர் தற்போது வரையில் 4 படங்கள் இவரது நடிப்பில் உருவாகியுள்ளது,

முதன்முறையாக பிரபுதேவா போலீசாக நடித்துள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்,

நடனத்திற்கு புகழ்பெற்ற பிரபுதேவா முழுக்க அம்மா சென்டிமெண்ட்டில் நடனம் ஆடாமல் ஆக்சனில் ஆடியுள்ள படம் தேள்.

‘பஹீரா’ என்ற படத்தில் சைக்கோ ஆக நடித்துள்ளார். இதில் பெண் வேடமிட்டும் மொட்டை போட்டும் என பல வித்தியாசமான கெட்அப்புகளில் வருகிறார். காதலித்து இளைஞர்களை ஏமாற்றும் பெண்களை பழிவாங்க பஹீரா-வாக அவதாரமெடுத்துள்ளார் பிரபுதேவா.

இதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.

பிரபுதேவா நாயகனாக நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ படம் நவம்பர் 19ல் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. ‘தேள்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவையில்லாமல் லட்சுமி மேனன் உடன் ‘யங் மங் சங்’ என்ற ஒரு படத்திலும் நடித்துள்ளார் பிரபுதேவா. ஆனால் அந்த படம் முடிந்து சில வருடங்களாகியும் இன்னும் ரிலீசாகவில்லை.

யங் மங் சங் பற்றி கூடுதல் தகவல்…

பிரபுதேவா பேர் யங்க நாராயாணன், ஆர்.ஜே.பாலாஜி பேர் மங்கலம், ‘கும்கி’ அஷ்வின் பேர் சங்கர்.

இந்த படமானது 1980களில் நடக்கும் கதைக்களம். இவர்கள் கிராமத்துல குங்ஃபூ சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்ள சைனா போறாங்க.

குங்ஃபூ கற்றுக் கொண்டபின் இவர்கள் தங்கள் பெயரை மாஸ்டர் யங், மாஸ்டர் மங், மாஸ்டர் சங்னு மாத்திக்கிறாங்க. எனவே படத்தின் பெயர் இப்படி மாறியுள்ளது.

இதில் சித்ரா லக்‌ஷ்மணனின் பெண்ணாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். பிரபுதேவாவின் தந்தையாக தங்கர் பச்சான் நடித்துள்ளார்.

Prabhu Deva’s upcoming films list here

உங்க மதத்தை உயர்த்திக் காட்ட அடுத்த மதத்தை தாழ்த்தாதீங்க – சந்தானம்

உங்க மதத்தை உயர்த்திக் காட்ட அடுத்த மதத்தை தாழ்த்தாதீங்க – சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நவம்பர் 16 மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சந்தானம் பதிலளிக்கையில்.. “ஜெய் பீம் படமாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும் ஒரு மதம் பற்றி உயர்வாக பேசலாம். ஆனால் அடுத்த மதம் குறித்து இழிவாக பேசக்கூடாது-

உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். ஆனால், கிறிஸ்தவ மதம் பற்றி தாழ்வாக பேசக் கூடாது. அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது.

ஏனென்றால், சினிமா என்பது ஒரு இரண்டு மணி நேர பொழுதுபோக்கு.

எல்லா மதத்தினரும், சாதியினரும் தியேட்டர்களில் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கிறோம். எனவே சாதி மதம் என்பது தேவையில்லாத விஷயம்.

சாதி மத கவலைகளை மறந்து தான் தியேட்டருக்கு வருகிறோம். எனவே சமுதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும்..” என்றார்.

‘சபாபதி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சபாபதி படத்தில் சந்தானம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ளார். சந்தானத்தின் நண்பனாக புகழ் நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், டிக்கிலோனா புகழ் மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அப்பா, மகனுக்கிடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் திக்கு வாய் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் 2வது ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிப்பில் ‘சர்வம் சுந்தரம்’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

Santhanam talks about Jai Bhim issue

மாடலாக மாறிய கமல்..; உலகநாயகனின் அடுத்த விஸ்வரூப அவதாரம்

மாடலாக மாறிய கமல்..; உலகநாயகனின் அடுத்த விஸ்வரூப அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர், பாடகர் என சினிமாவில் பன்முகத் திறமையாளர்கள் பலர் உண்டு. ஆனால் உண்மையான சகலகலா வல்லவன் என்றால் அது கமல்ஹாசன் தான்.

எவருமே ஏற்கத் தயங்கும் கேரக்டர்களை ஏற்று ரசிகர்களை கவர்ந்து வருபவர் இவர்.

இந்திய சினிமாவே பார்த்திராத புதிய தொழில்நுட்பங்களை தன் படங்களில் அவ்வப்போது கொண்டுவந்து தான் ஒரு உலகநாயகன் என்பதை நிரூபித்து வருபவர்.

5 வயது முதல் 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார்.

தற்போது அரசியல் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

மேலும் தனியார் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 5 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக நடத்திவருகிறார்.

இந்த நிலையில் தனது அடுத்த முயற்சியாக தொழிலதிபராக விஸ்வரூபம் எடுத்துள்ளார் கமல்ஹாசன்.

தனது சொந்த ஃபேஷன் பிராண்டான KHHK ஐத் தொடங்கியுள்ளார். அதாவது KH என்றால்– House of Khaddar எனப் பெயராகும்.

கதர் வகை ஆடைகளை மக்களிடையே ஊக்குவிக்க கமல் மேற்கொண்டுள்ள முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

காதி ஆடைகளை அறிமுகப்படுத்தி KHHK க்கான ப்ரோமோ டீசரை அவர் வெளியிட்டுள்ளார்.

கதர் ஆடைகளை அணிந்து பல பெண்கள் ஆண்கள் நடந்து வருகின்றனர்.

இறுதியாக கம்பீரமான காதி உடையில் கமல்ஹாசன் நடந்து வருகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர் ரத்னவேலு (ராண்டி) KHHK க்கான இந்த விளம்பர டீசரை இயக்கியுள்ளார்.

Kamal Haasan launches his own brand

ராஜாக்கண்ணு மனைவிக்கு 15 லட்சம் உதவிய சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

ராஜாக்கண்ணு மனைவிக்கு 15 லட்சம் உதவிய சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் 1995ல் ராஜாக்கண்ணு என்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து அவரை லாக்கப்பில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தது.

இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ஜெய் பீம் எனும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் சந்துருவாக நடித்தார்.

இந்த ஜெய்பீம் படமானது இருளர் பழங்குடியினரின் காவலில் சித்திரவதைக்கு ஆளாகியிருப்பதையும், அவர்களுக்காக சூர்யா நடித்த நீதியரசர் சந்துரு எவ்வாறு போராடி வென்றார் என்பதையும் பேசும் படமாக இது அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தில் உள்ளது போல் நிஜ வாழ்க்கையிலும் கஷ்டப்பட்ட ராஜாக் கண்ணுவின் மனைவி பார்வதியை நேரில் சந்தித்து தனது சார்பில் ரூ. 10 லட்சம், 2D படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ. 5 லட்சம் ஆகியவற்றுக்கான வங்கி நிரந்தர வைப்புத்தொகை ஆவணங்களை வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

இதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்னிலையில் தன் இல்லத்தில் கொடுத்தார் நடிகர் சூர்யா.

பல ஆண்டுகளுக்கு பின் தனக்கு இந்த உதவிகள் கிடைத்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக பார்வதி (தற்போது பாட்டி) தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக பிரமுகருமான அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு படம் குறித்து 9 கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். சூர்யாவுக்கு இதற்கு பதிலளித்து இருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனிடையில் தான் ஜெய்பீம் படத்தில் தங்கள் சமூகத்தை அவமதிப்பு செய்துள்ளதாக வன்னியர் பிரிவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வன்னியர் சமூகத்தை அவதூறாகப் பேசிய ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சிகளை நீக்கக் கோரியும் வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வன்னியர்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை தி.நகரிலுள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Police protection for Suriya house

நெகட்டிவ் ரோலில் அஜித்.. வில்லனாக விஜய்சேதுபதி..; மாஸ்டர் ப்ளானில் வினோத்.?

நெகட்டிவ் ரோலில் அஜித்.. வில்லனாக விஜய்சேதுபதி..; மாஸ்டர் ப்ளானில் வினோத்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் வினோத்.

இவர் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ள இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வினோத்.

இந்த படத்தில் மங்காத்தா பாணியில் நெகட்டிவ் ரோலில் அஜித் நடிக்கவுள்ளார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் வினோத்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது சம்பந்தமாக விஜய்சேதுபதியை வினோத் சந்தித்து கதை சொன்னதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது அஜித் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க போகிறாரா? அல்லது விஜய்சேதுபதியை நாயகனாக வைத்து தனிப்படத்தை வினோத் இயக்க போகிறாரா? என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே ரஜினிக்கும் விஜய்க்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். எனவே அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Ajith and Vijay Sethupathi joins for a new film ?

தமன் இசையில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 2 மொழி படம்

தமன் இசையில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 2 மொழி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானவர் தமன்.

ஆனால் தன் நடிப்பு ரூட்டை மாற்றிக் கொண்டு இசையமைப்பாளராக கவனம் செலுத்தினார். தற்போது இவரது இசைக்கு மயங்கிய ரசிகர் பட்டாளமும் இங்குண்டு.

இவரது இசையில் உருவான ‘புட்ட பொம்மா…’ பாட்டு செம ஹிட்டு. இந்த பாடல் தென்னிந்தியளவில் மிகப்பிரபலமானது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம் சரண் படத்திற்கும் தமனே இசையமைத்து வருகிறர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் நேற்று நவம்பர் 16ல் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்த வாழ்த்தில், “இனிய பிறந்நதாள் வாழ்த்துகள் தமன் ப்ரோ, ‘புட்ட பொம்மா’ போல மேலும் பல ஹிட்களைக் கொடுக்க வாழ்த்துகள்,” என குறிப்பிட்டு வாழ்த்தினார்

அதற்கு தமன், “பிரதர் சிவகார்த்திகேயன், உங்கள் அன்புக்கு நன்றி, பின்றோம், தட்றோம், தூக்கறோம், எஸ்கே 21” என பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ‘ஜதி ரத்னலு’ தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்கவுள்ளார் என்பதை நம் தளத்தில் சில மாதங்களுக்கு முன் பார்த்தோம்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கவுள்ளனர்.

Thaman and Sivakarthikeyan joins for bilingual film

More Articles
Follows