கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

oomai vizhigalபழைய படத்தலைப்புகளை புதிய படத்திற்கு வைப்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது.

அந்த வரிசையில் ‛ஊமை விழிகள்’ என்ற படமும் இணைந்துள்ளது.

32 ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் வெளியான இப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க ஆபாவாணன் தயாரிக்க விஜயகாந்த், கார்த்திக் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பிறகு தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு சினிமாவில் பிரபலமானார்கள்.

தற்போது இதே பெயரில் உருவாகவுள்ள படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க வி.எஸ் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய காஸிப் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல், யங் மங் சங் படங்கள் வெளியாக தயாராகவுள்ளது.

மேலும் சல்மான்கான், சுதீப், சோனாக்ஷி சின்கா நடிப்பில் ஹிந்தியில் தபாங் 3 என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

Overall Rating : Not available

Related News

Latest Post