கமல்ஹாசனுடன் இணையும் தாடி பாலாஜி-பவர் ஸ்டார் சீனிவாசன்

சினிமா, அரசியல் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல்ஹாசன்.

விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜீன் 17ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதன் முதல்பாகத்தை கமலே தொகுத்து வழங்கியிருந்தார். அதில் ஓவியா, நமீதா, ஸ்நேகன், பிந்து மாதவி, ஆரவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் ஆரவ் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்துக் கொள்ளவுள்ளாராம். மேலும் பவர் ஸ்டார் சீனிவாசனும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Overall Rating : Not available

Latest Post