மெஜாரிட்டி இல்லாமல் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்..; என்ன நடந்தது.. சின்ன ப்ளாஷ்பேக்!

Narayanasamy  (2)தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி் அரசு கவிழ்ந்துள்ளது.

என்ன நடந்தது..: ப்ளாஷ்பேக்

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க., – MLAக்கள், மாகி தொகுதி சுயேச்சை MLA, ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

2020 கடந்தாண்டு ஜூனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங். கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக ஆனது.

இந்தாண்டு 2021 ஜனவரியில்… முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் காரணமாக பபொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி MLA நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி MLA தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தனர்.

எனவே காங். கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக ஆனது.

இதன் பின்னர் புதுச்சேரி யானம் MLA மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதியும் அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் MLA ஜான்குமார்‌ இருவரும் ராஜினாமா செய்தனர்.

அதே பிப்ரவரி 16 இரவில்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜனாதிபதி ஒப்படைத்தார்.

பிப்ரவரி 17ஆம் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ராகுல்காந்தி புதுச்சேரி வந்தார்

பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் தமிழிசை.

இதையடுத்து நாராயணசாமி நியமன பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றார்.

இதற்கு பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், “உச்சநீதிமன்றம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது.. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கு பெறுவோம்‌” என்றார்.

பிப்ரவரி 21ஆம் தேதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் MLA லட்சுமி நாராயணன் & திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி MLA வெங்கடேசன் இருவரும் ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது…”புதுச்சேரியில் பாஜக ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியிருப்பதாகக் கூறிநீர்.

ஆனால், ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் குறித்து எதுவும் பேசவில்லை.

தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக வெங்கடேசன் நீக்கப்பட்டுவதாக திமுக அறிவித்துள்ளது.

ஆக மொத்தம் புதுச்சேரியில் 6 MLAக்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 11ஆக ஆனது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இன்று சட்டசபையில் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.

பெரும்பான்மை இல்லாமல் போனதால் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

துணைநிலை கவர்னரிடம் தனது அரசு மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.

இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

Pondy CM Narayanasamy failed to show majority in floor test

Overall Rating : Not available

Latest Post