4 காங்கிரஸ் MLAக்கள் ராஜினாமா..; புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி

Narayanasamy (2)புதுச்சேரி காரைக்கால் மாஹி ஏனாம் ஆகியவற்றை சேர்த்தே புதுச்சேரி மாநிலம்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் உள்ளனர்.

மேலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 உள்ளனர். ஆக மொத்தம் 33 பேர் உள்ளனர்.

இதில் கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது.

மேலும் பா.ஜ.கவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் என்பவரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்று காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுச்சேரி அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதர புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Pondy CM has called for an urgent Cabinet meeting following the resignations

Overall Rating : Not available

Latest Post