டிசம்பர் 31ல் அரசியல் குறித்த என் முடிவை தெரிவிப்பேன்: ரஜினி

டிசம்பர் 31ல் அரசியல் குறித்த என் முடிவை தெரிவிப்பேன்: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stage speechரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 20 வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் ரஜினிகாந்த் அடிக்கடி அரசியல் குறித்து பேசி வருவதால் அரசியல் பிரபலங்களும் அவரின் அரசியல் குறித்த முடிவை அறிய ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தல் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி.

அப்போது அவர் பேசியதாவது….

எனது அரசியல் பிரவேசம் பற்றி அறிய மக்களை விட ஊடகங்கள்தான் அதிக ஆர்வத்தில் உள்ளனர்.

எனக்கு அரசியல் புதிது அல்ல. 1996 முதலே அரசியலில் உள்ளேன்.

(1996ஆம் ஆண்டுதான் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து ரஜினி வாய்ஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

என் அரசியல் நிலைப்பாட்டை வருகிற டிசம்பர் 31ஆம் அறிவிக்கிறேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை. அது என்ன என்பதை அன்று அறிவிப்பேன்.” என்று பேசினார்.

On Dec 31st 2017 i will announce my political stands says Rajinikanth

அரசியலுக்கு வர தயக்கம் காட்டுவது ஏன்..? ரஜினிகாந்த் விளக்கம்

அரசியலுக்கு வர தயக்கம் காட்டுவது ஏன்..? ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini speechரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அப்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது….

அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியலின் ஆழம் தெரியும். அதை முழுமையாக தெரிந்திருப்பதால் தயங்குகிறேன்.

இல்லையென்றால் எப்போதோ அரசியலுக்கு வந்திருப்பேன்.

கடந்த சந்திப்பின் போது போர் வரும்போது பார்க்கலாம் என்றேன்; போர் என்றால் தேர்தல்?.

இப்போ தேர்தல் வந்துட்டா?

எடுக்கும் முடிவை மனதில் இருந்து எடுக்கக்கூடாது. மூளையில் இருந்து எடுக்க வேண்டும்.

யுத்ததுக்கு வந்தால் ஜெயிக்க வேண்டும். தோற்க கூடாது.

வீரம் மட்டும் முக்கியமல்ல. வியூகம் ரொம்ப முக்கியம்.

எனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ல் அறிவிப்பேன்.” என்றார்.

Rajinikanth reveals Why he hesitate to enter into politics

பத்து வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு யுவன் இசை

பத்து வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு யுவன் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan shankar raja composing music for Maari2அண்மைக்காலமாக தனுஷ் படங்களுக்கு அவரின் நண்பர் அனிருத் இசையமைத்து வந்தார்.

இந்த கூட்டணி 3, மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணிபுரிந்தது.

சில காரணங்களால் அந்த கூட்டணி பிரிய தற்போது தன் படங்களுக்கு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் திடீரென பத்து வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் இணையவுள்ளார் தனுஷ்.

மாரி2 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக அப்பட இயக்குனர் பாலாஜிமோகன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2008ல் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், யுவன் கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

நடிகர் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Yuvan shankar raja composing music for Maari2

Balaji Mohan‏Verified account @directormbalaji 1h1 hour ago
Privileged to be working with one of my all time favourite music directors! Happy to officially announce that @thisisysr sir is on board for #Maari2 & music work has started! @dhanushkraja sir & #Yuvan sir combo back after 10 years!

சிவகார்த்திகேயனின் அனைத்து பட வசூலையும் முறியடித்த வேலைக்காரன்

சிவகார்த்திகேயனின் அனைத்து பட வசூலையும் முறியடித்த வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaran stillsசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வேலைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்தது.

தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது, இப்படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதில் சென்னையில் ரூ 89 லட்சம், செங்கல்பட்டு பகுதியில் ரூ 1.69 கோடி, கோயமுத்தூரில் ரூ 1.47 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இதற்கு முன் வந்த ரெமோ படத்தின் முதல் நாள் வசூலை வேலைக்காரன் முறியடித்துள்ளது, ரெமோ ரூ 6.5 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்குமுன் வெளியான அவரது படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஜிவி. பிரகாஷின் 100% காதல் ரிலீஸ் தகவல்கள்

ஜிவி. பிரகாஷின் 100% காதல் ரிலீஸ் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 percent kaadhalஜிவி. பிரகாஷ் நடிப்பில் செம, அடங்காதே, நாச்சியார், குப்பத்து ராஜா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

மேலும் 4ஜி, ஐங்கரன், 100% காதல், ரெட்ட கொம்பு, சர்வம் தாளமாயம் ஆகிய படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

இதில், 100% காதல் எனற் படத்தை இயக்குனர் சந்திரமௌலி இயக்கிவருகிறார்.

இப்படம் கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தமிழ் ரீமேக்கில் ஜிவிக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

இவர்களுடன் நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்பட பலரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து சொல்லும் விதமாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், 2018 ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப்பெற்ற தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் என விஷால் அறிக்கை

வெற்றிப்பெற்ற தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் என விஷால் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal and TTV Dinakaranபிரபல நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தினகரனுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…

”அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்.

இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.

குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று விஷால் கூறியுள்ளார்.

தினகரனைப் போல விஷாலும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இதே தொகுதியில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் சில காரணங்களால் அவரது வேட்பு மனு நிராகரிப்பு செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows