‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு போராட்டம் முடிவடையும் நிலையில், திடீரென கலவரமானது.

இது தொடர்பாக தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் கூறிவருவதாவது…

ஜல்லிக்கட்டை தடை செய்ய Peta சொல்வதால், நாம் பீட்டாவை தடை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டாம்.

ஆனால், அதில் சிலவிதிமுறைகளை மாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் கார்களில் அடிப்பட்டு நாய்கள் கொல்லப்படுகின்றன. அதற்காகவும் அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

கார்களில் மனிதர்கள் கூட அடிப்படுகிறார்கள். அதற்காக காரை தடை செய்ய முடியுமா?

சில இடங்களில் ஸ்பீட் பிரேக் மற்றும் ஸ்பீட் லிமிட் செய்வது போல் ஒழுங்கப்படுத்த வேண்டும்.

ஆனால் மாட்டை சாப்பிடுவதற்கு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.

இவர்கள் இல்லையென்றால் நாளை வேறு ஒரு அமைப்பு வரலாம். அதற்காக எல்லாம் அமைப்புகளை தடை செய்ய சொல்ல முடியாது.

அவர்கள் அமைப்பில் சில விதிமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.” என்று பேசினார்.

தங்கத்தால் எழுதப்பட வேண்டிய போராட்டத்தை முடிக்க ரஜினி வேண்டுகோள்

தங்கத்தால் எழுதப்பட வேண்டிய போராட்டத்தை முடிக்க ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இன்று போராட்டத்தை கைவிட கூறிய காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய அமைதி போராட்டத்தை தமிழக மக்கள் அனைவரும் இணைந்து நடத்தியுள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டம் வெற்றி மாலை சூடும் வேளையில், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து பெரிய பெரிய நீதியரசர்கள், வக்கீல்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு C22V7Q1UkAE7hppஉறுதி கூறியபிறகு அதற்கு கெளரவம் கொடுத்து அவர்கள் கூறிய நாள்கள் வரை அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.

சில சமூக விரோதிகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புகும் முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘மோடியிடம் சொல்லிவிட்டேன்; ஓபிஎஸிடம் பேசிவிட்டேன்..’ – கமல்

‘மோடியிடம் சொல்லிவிட்டேன்; ஓபிஎஸிடம் பேசிவிட்டேன்..’ – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhaasanஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என தமிழக இளைஞர்கள் ஒரு வாரம் போராடி வந்தனர்.

இன்று காலை போலீஸ் தடியடி செய்து கலைத்தனர்.

இதனால் தமிழகம் போர்களம் போல் காட்சியளித்து வருகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து கமல் கூறியுள்ளதாவது…

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது.

இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல.

அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன்.

அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள்.

அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்.

என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பதட்டம்… ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

தமிழகத்தில் பதட்டம்… ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chn policeகடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள போராட்டக்களத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அதிகாலையில் போராட்டத்தை கலைத்து இளைஞர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்துள்ளோம்.

  • திருவல்லிக்கேணியில் போராட்டக்காரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு
  • சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டம் கலைப்பு.
  • மெரினாவில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
  • மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
  • அனைவரும் அவரவர் ஊர்களில் நடக்கும் போராட்டக்களத்திற்கு உடனே வரவும். மாணவருடன் மக்கள் கைகோர்க்கவும் – மக்களுக்கு போராட்டகளம் அழைப்பு.
  • மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு உணவு எடுத்து செல்ல தடை தற்போது மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு கடல் வழியாக படகு மூலம் உணவு எடுத்து வந்து உணவு வழங்கும் பணி தீவிரம்.
  • வலுக்கட்டாயமாக மாணவர்களை அப்புறப்படுத்தியது கண்டனத்திற்குரியது என்று தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.
  • திருச்சியில் 5 நாட்களாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 5 கோரிக்கைகளை முன் நிறுத்தி போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்.
  • கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என திருச்சி இளைஞர்கள் அறிவித்துள்ளனர். நெல்லையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்.
  • காஞ்சிபுரம் , பரமக்குடி அரியலூர் , சேலம் , பெரம்பலூர் , கருர் ஆகிய உள்ள மாணவர்கள் வெளியேற்றம்.
  • சென்னை ராயப்பேட்டையில் பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது தடியடி.
  • சென்னையில் பொது மக்கள் கொந்தளிப்பு ஆங்காங்கே பொது மக்ககளும் அமர்ந்து சாலை மறியல்.
  • திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற போராட்ட களத்திலிருந்து பிரிந்து சென்ற மற்ற பிரிவினர் சாலையில் அமர்ந்து போராட்டம்.
  • மெரினாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றபடுவதால் இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம்.
  • சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது மணல், செருப்பு வீச்சு
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
  • அலங்காநல்லூர் போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை.
  • சென்னை ராயப்பேட்டையில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது போலீஸ்
  • போராட்டத்தின் காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
  • மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு
  • சென்னை கடற்கரை பகுதிகளில் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க முயற்சி
  • சேலம் சிறை பிடிக்கப்பட்டிருந்த ரெயிலை அதிரடியாக போலீஸ் மீட்டது ரெயிலின் முன்பிருந்த ஆர்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப் பட்டனர்.
  • ஆனாலும் போராட்டத்தை நடத்துவோம் என மாணவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

 

ஜல்லிக்கட்டு போராட்டகாரர்களுக்கு சகாயம் ஐஏஎஸ் தரும் ஐடியா

ஜல்லிக்கட்டு போராட்டகாரர்களுக்கு சகாயம் ஐஏஎஸ் தரும் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sagayam IASஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளைஞர்களுடன் சில புல்லுருவிகள் கலந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இந்த புரட்சி போராட்டம் முடிவு பெறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள்.

இந்நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் சகாயம் தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்…

இனி எந்த நடிகரையும், செலிபிரட்டிகளையும் உள்ளே அனுமதிக்காதீர்கள் …

அது நடிகர் விவேக்கோ, ஹிப் ஹாப் ஆதியோ, யாராக இருந்தாலும் சரி … உங்களுடன் சரிசமமாகப் பேச அனுமதிக்காதீர்கள்.

இந்த நடிகர்கள், எவரையும் விட மாணவச் செல்வங்களாகிய நீங்களே உயர்ந்தவர்கள்.

வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டீர்கள்.

காளையை,காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியவுடன்,நீங்கள் வெற்றியடைந்தவர்களாவீர்கள்.

அதுவரை மார்க்கண்டேய கட்ஜுவோ,நடிகர்களோ உங்களுள் புகுந்து குழப்ப விடாதீர்கள்..

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இது போன்றதொரு மாபெரும் போராட்டம் நடந்ததில்லை.

தமிழக இளைஞர்களாகிய நீங்களே எதிர்காலத்தில் இந்த உலகிற்கே வழிகாட்டியாக இருக்கப் போகிறீர்கள்..

என்றும் வெற்றி இனி உங்கள் வசம்…

தோழமையுடன் – சகாயம் IAS

என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sagayam IAS advice to Students Jallikattu Protest

அட்வைஸும் சப்போர்ட்டும் வேண்டாம்; யாரை தாக்குகிறார் சிம்பு.?

அட்வைஸும் சப்போர்ட்டும் வேண்டாம்; யாரை தாக்குகிறார் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuகடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு வேண்டும் என தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க பட்ட நிலையில், போராட்ட களத்தில் இருந்து விலகுவதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதனிடையில் இளைஞர்களுக்கு ஆதரவாக மெரினா போராட்டக்களத்தில் நேரிடையாக கலந்துக் கொண்ட சிம்பு, தன் ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் பெயரை குறிப்பிடாமல் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

ஒன்றை மட்டும் இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்.

எதை செய்தாலும் நீங்களே முடிவு எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

STR ‏@iam_str

Stating that the issue is getting diverted itself means they r trying to divert it . Lets not get confused and pls stay united #jallikattu

We don’t need anyones advice nor their support . All we need is our courage and unity . Stand together and don’t fall prey #jallikattu

Request students who r well read and sensible to stand front and take a call . We are not here to fight and do what u feel is right.

Request students who r well read and sensible to stand front and take a call . We are not here to fight and do what u feel is right .

We should not fight along us and that is what will spoil the spirit .So its not the time for that ,what ever the decision is lets be united

What ever the decision is , all i can say is pls be united and unity is what made us #StandUnitedThamizha #jallikattu

More Articles
Follows