தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் அதிகாலை காட்சிகள் வேண்டுமென ரசிகர்களும் தயாரிப்பு நிறுவனமும் அடம்பிடிக்கின்றது.
ஆந்திரா கேரளா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4am / 5am மணி காட்சிக்கு புதுச்சேரியில் 7am மணி காட்சிக்கு ‘லியோ’ படத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது,
இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் 4 மணி காட்சிக்கு மறுப்பு தெரிவித்ததோடு 7 மணி காட்சி வேண்டுமானால் தமிழக அரசிடம் பேசி பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருந்தார்.
அத்தோடு இந்த விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மாலை 4 மணிக்குள் தெரிவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அரசு வழங்கி உள்ள ஐந்து காட்சிகள் போதுமானது என தெரிவித்துள்ளன.
மேலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு ஒரு மணிக்குள் ஐந்து காட்சிகள் திரையிட போதுமான நேரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அதிகாலை காட்சிகள், 7மணி காட்சிகள் தேவையற்றது. இதனால் திரையரங்கின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.
தியேட்டர் உரிமையாளர்களின் இந்த பதில் நிச்சயமாக விஜய் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்யும். அதிகாலையில் தளபதி விஜய்யை காண வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
என்ன மூன்று மணி நேரம் தாமதமாக விஜய் திரையில் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என நம்பலாம்.
No need of 7am shows for Leo Theatre owners reaction