தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்ட குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அரசியல் குறித்தும் சினிமா குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்…
“தமிழக அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி விட்டதாக தெரிவித்துள்ளது. அதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது.
“விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டேன். அரசியல் வருவேன் என எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்ன பிறகு அவரின் அரசியல் வருகை குறித்து நான் கருத்து தெரிவிப்பேன்.
இப்போது நம்பர் ஒன் ஹீரோவாக விஜய் உள்ளார். அவரது ‘லியோ’ படத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார் விஜய பிரபாகரன்.
No 1 hero Vijay says Vijayakanth son Vijaya Prabakar