2 வருடங்களாக போராடும் ஸ்ரீஜித்துக்கு ஆதரவாக நிவின்பாலி-பார்வதி

2 வருடங்களாக போராடும் ஸ்ரீஜித்துக்கு ஆதரவாக நிவின்பாலி-பார்வதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly and Parvathi nairகேரளா போலீஸ் காவலில் தனது சகோதரர் ஸ்ரீஜிவ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்ததையடுத்து கடந்த 2 வருடங்களாக திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு முன் போராடி வருகிறார் ஸ்ரீஜித்.

இவரது இந்த போராட்டத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.

மேலும், மாநில அரசும், சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மலையாள திரைப் பிரபலங்கள் ஸ்ரீஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஜித்தின் போராட்டம் பற்றி #JusticeForSreejith என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இவரின் போராட்டத்துக்கு நடிகர் நிவின் பாலி, நடிகை பார்வதி ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கமல் கட்சியில் இணைவீர்களா..? சூப்பர்ஸ்டாரின் சூப்பர் பதில்

கமல் கட்சியில் இணைவீர்களா..? சூப்பர்ஸ்டாரின் சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and kamal haasanகமலும் ரஜினியும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

சினிமாவை தாண்டியும் இவர்கள் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இருவரும் அரசியல் களத்தில் குதிக்கின்றனர்.

விரைவில் இவர்களின் தனி தனி கட்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் கமலுடன் இணைந்து அரசியலில் பணியாற்றுவீர்களா எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு காலம்தான் பதில்சொல்லும் என வழக்கமான பதில் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

ஒரே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா-கார்த்தியுடன் டூயட் பாடும் பிரியா

ஒரே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா-கார்த்தியுடன் டூயட் பாடும் பிரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Priya Bhavani Shankarபுதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் பிரியா பவானிசங்கர்.

இதனையடுத்து விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.

இதன் மூலம் பல ரசிகர்களைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படம் கடந்த 2017ல் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தியின் மாமா பெண்ணாக நடிக்கிறார்.

மேலும் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா உடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

மேயாத மான் நாயகி ப்ரியாவை வளைத்த எஸ்.ஜே.சூர்யா

மேயாத மான் நாயகி ப்ரியாவை வளைத்த எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sj suryah and priya bhavani shankarஅண்மையில் வெளியான ‘ஸ்பைடர்’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் கொடூரமான வில்லனாக கலக்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

இத்துடன், செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘இறவாக்காலம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படங்கள் இன்னும் வெளியாகவில்லை

இந்நிலையில் தற்போது ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இதில் இவருக்கு பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை இயக்கிய பொட்டென்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது.

நான் ஏமாற்றி விட்டேனா..? பொய்ப் புகாருக்கு ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!

நான் ஏமாற்றி விட்டேனா..? பொய்ப் புகாருக்கு ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer RK Suresh‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப் பின் ஆர்.கே. சுரேஷ் தன் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் பிரமாண்டப் படமாக உருவாகவுள்ள ‘புலிப்பாண்டி’ படத்தில் நடிக்கவுள்ளார்.

பிற நடிகர்கள் படக் குழு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

அவரிடம் அவரைப் பற்றி வந்துள்ள செய்தி பற்றிக் கேட்டோம். தன்னைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் பற்றித்தானே என்று பேச ஆரம்பித்தார்.

” கோடை மழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது கவனிக்கப்படவில்லை..

மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

நாங்கள் முயன்று தியேட்டர்கள் பிடித்து வெளியிட உதவினோம்.

படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை.

இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி பணமும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தோம். ஆனால் எதுவுமே கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் சம்பந்தப்பட்ட கணக்குகள் அப்படியே உள்ளன. அவர்கள்தான் வாங்கிக் கொள்ளவில்லை.

அதற்கு நானா பொறுப்பு? எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் பேசித் தெளிவு படுத்தி தீர்த்துக் கொள்வதை விட்டு விட்டு ஒரு தயாரிப்பாளர் பற்றி பொதுவில் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கத்தின் நடை முறை சட்டதிட்டங்களுக்கு எதிரான செயல்.

அது மட்டுமல்ல இது என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும்.

இது தொடருமானால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

விஜய்-சிவகார்த்திகேயனுடன் நடன போட்டிக்கு தயாரான இமான் அண்ணாச்சி

விஜய்-சிவகார்த்திகேயனுடன் நடன போட்டிக்கு தயாரான இமான் அண்ணாச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Traffic ramaswamy movie stillsசமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

அப்பாடல் வரிகள்

“சாராய மண்டைய மண்டைய
குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க
ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க
வாடா மச்சான்“

இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார்.

இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி ஒரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார்.

இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இப்பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த NOBLE என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் இசை பாலமுரளி பாலு ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது.

More Articles
Follows