இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!

இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் .
தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் .

தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analog austronaut training centre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிச் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு இலட்சம்(8,00,000) ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது.

மாணவியின் பறிச்சிக்காக தேவைப்படும் தொகையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்தின் சார்பாக அவரின் ரசிகர் மன்ற தலைமை செயலாளர் திரு .குமரன் மற்றும்
தேனி நகர தலைவர் விக்னேஷ் ஆகியோர் மூலம் வழங்கினர்
மேலும் விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியின் மூலம் உதயகீர்த்திகாவிடம் பேசி பாராட்டியுள்ளார் .

இதோ ஒரு புது ஆல்பம்

இதோ ஒரு புது ஆல்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mazhai Saaralமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன .

இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் “மழை சாரல் ” .
இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார்.
‘ காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன.

ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பாடல்களை உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம் எனப் பெயர் மாற்றி முதல் ஆல்பமாக மழை சாரலை உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் மியூசிக் டைரக்டர் யாதவ் ராமலிங்கம் அவர்களை பாராட்டி ஆல்பத்தை வெளியிட்டது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆல்பத்தின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமரசத்துக்கு இடமின்றி செலவு செய்துள்ளனர். எனவே லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பயன்படுத்தப் பட்டுள்ளதாக யாதவ் ராமலிங்கம் கூறுகிறார். முந்தைய பாடல்கள் போலவே இந்த ஆல்பமும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

https://youtu.be/I_oSvHSXPWE

அதிவேக படப்பிடிப்பில் ஆதியின் ‘கிளாப்’

அதிவேக படப்பிடிப்பில் ஆதியின் ‘கிளாப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அடுத்த எதிர்வரும் நாட்களுக்கு, ஆதி வியர்வையில் நனைவது, தசைகளை நெகிழச் செய்வது, மூட்டுகளை நீட்டுவதை நீங்கள் காண முடியும். ஆம், ஒரு கடுமையான தடகள வீரரான அவர், அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் “கிளாப்” படத்தில், தன் கதாபாத்திரத்திற்கு தன் உயிரையும், ஆன்மாவையும் தந்து உழைக்கிறார். ‘தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற உத்வேகம் அளிக்கும் டேக்லைன் உடன் படம் வெளியாகிறது.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் ஜூன் 12ஆம் தேதி ஒரு எளிய சடங்கு விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 20) முதல் முழு வீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள நேர்த்தியான மற்றும் அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது. ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிரபலமடைந்தவர் என்றாலும், முன்னணி நடிகைகளாக நடிக்கும் அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரும் உடற்பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது குறித்து இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, “நாங்கள் இப்போது எங்கள் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறோம், தொடர்ந்து முழு வீச்சில் செல்லத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து கலைஞர்களும் தங்களது கதாபாத்திரங்களிளுக்கு தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்வதால், என் வேலை எளிதாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆதி சார் அனைவரும் வியக்கும் வகையில் தன் உடலமைப்பை பராமரிப்பதில் நன்கு அறியப்பட்டவர். இயற்கையாகவே அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். அகான்ஷா சிங் ஒரு சிறந்த கலைஞர், இந்த கதாபாத்திரத்தில் அவரது மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். கிரிஷா குரூப் கடந்த சில மாதங்களாக தன்னுடைய தடகள் விளையாட்டு வீராங்கணை பாத்திரத்திற்காக மிக கடினமான உழைத்து வருகிறார். ஒரு வேளை அவர் மேலும் பயிற்சி எடுக்க முடிவு செய்திருந்தால், இந்த படத்தை தவிர்த்து விட்டு, நேரடியாக ஒரு தடகள வீராங்கணையாக பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கலாம்” என்றார்.

மிகுந்த உற்சாகத்துடன் படப்பிடிப்பு நடக்கும் தற்போதைய சூழ்நிலையை பற்றி கூறிய இயக்குனர், மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இசையை நினைத்து மேலும் உற்சாகமடைகிறார். “ஒரு படத்தின் உணர்வுகள் எப்போதும் அவரின் இசை மூலம் சிறந்த முறையில் மேம்படும். எங்கள் திரைப்படமான “கிளாப்” படத்தில் உணர்வுகள் மையமாக இருப்பதால், இசைஞானி இளையராஜா ஐயாவின் ஆத்மார்த்தமான இசையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த படத்தில் 5 பாடல்கள் உண்டு” என்றார்.

நாசர் போன்ற மிகச்சிறந்த நட்சத்திர நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அவர் இந்த படத்தின் வில்லனாக தோன்றுகிறார். முனீஷ்காந்த் கிட்டத்தட்ட மொத்த படத்திலும் தோன்றும் அளவுக்கு மிகவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் சாருடைய கதாபாத்திரத்தை சுற்றி தான் கதை நிகழும். மைம் கோபி மற்றும் இன்னும் சில பிரபல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜீவி’ திரைப்படம் மற்றும் ‘மண்ணின் மைந்தர்கள்’ (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ) ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலை இயக்குநராக பணிபுரிகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை பி.பிரபா பிரேம், ஜி.மனோஜ் & ஜி. ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்

தனுஷ் படத்தை தொடங்கும் பரியேறும் பெருமாள் இயக்குனர்

தனுஷ் படத்தை தொடங்கும் பரியேறும் பெருமாள் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)எழுத்தாளராக தன் பயணத்தை ஆரம்பித்து தற்போது பரியேறும் பெருமாள் படம் மூலம் எல்லாருக்கும் தெரிந்த பிரபலமாகியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவரின் அடுத்த படம் என்ன? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

அடுத்த படத்திற்கான கதையை கூறி தனுஷிடம் கூறி ஓகே வாங்கியுள்ளார்.

எனவே விரைவில் இப்படம் தொடங்கவுள்ளது.

ரஜினியுடன் மோதும் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங்கின் தந்தை

ரஜினியுடன் மோதும் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங்கின் தந்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ்.

இதில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்காக பிறகு இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இவருக்கும் ரஜினிக்கும் மிகப்பயங்கரமான சண்டைகாட்சி ஒன்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். பஞ்சாபி மற்றும் சில இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்

நடிகர் சங்க தேர்தலுக்கு எனக்கும் சம்பந்தமில்லை..; கைவிரித்த கவர்னர்

நடிகர் சங்க தேர்தலுக்கு எனக்கும் சம்பந்தமில்லை..; கைவிரித்த கவர்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் நாசரின் பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் தமிழக கவர்னரை சந்தித்தனர்.

அதன்பின்னர் இந்த அணியின் அமைப்பாளர் ஐசரி கணேஷ் சொன்னதாவது…

‘விஷால் அணியினர் கவர்னரின் நேரத்தை வீண் செய்துவிட்டனர். அவர்கள் கவர்னரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம்.

விஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம்.

மேலும் அவர் கூறியதாவது…

இந்த தேர்தலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. இது தமிழக அரசு சம்மந்தப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டு பேச ஒன்றுமில்லை என்று ஆளுநர் கூறினார்’.

இவ்வாறு அவர் கூறினார்.

More Articles
Follows