நியூட்டன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லரான ‘கருப்பு கண்ணாடி’

நியூட்டன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லரான ‘கருப்பு கண்ணாடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PSR Film Factory தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் ‘கருப்பு கண்ணாடி’ பட படப்பிடிப்பு சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியுள்ளது.

‘கருப்பு கண்ணாடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் பாணியில், உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுப்ரமணிய சிவா கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல் முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

Newton directs psycho thriller film titled Karuppu Kannadi

சட்ட நுணுக்கங்களுடன் உருவாகும் நிவின்பாலியின் டைம் ட்ராவல் படம்

சட்ட நுணுக்கங்களுடன் உருவாகும் நிவின்பாலியின் டைம் ட்ராவல் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிவின்பாலி நாயகனாக நடிக்க புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் எழுதிய கதையை தழுவி உருவாகும் படம் ‘மஹாவீர்யார்’.

சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான் சாப்ரா இசை அமைத்துள்ளார்.

அப்ரித் ஷைனி இயக்கி வரும் இந்த படத்தை நிவின்பாலி தனது நண்பர் சம்னாசுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இவருடன் ஆஷிப் அலி, லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் ஷி குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் அப்ரித் சைனி கூறியதாவது:

இப்படம், பேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்கும். கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தில் ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. என்றார்.

மலையாளத்தில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

தொழில்நுட்ப குழுவில் சந்துரு செல்வராஜ் (ஒளிப்பதிவு), இஷான் சாப்ரா (இசை), மனோஜ் (எடிட்டர்), Sound Factor சார்பில் விஷ்ணு கோவிந்த் மற்றும் ஶ்ரீ சங்கர் ( சவுண்ட் டிசைன்) அனீஷ் நாடோடி (கலை இயக்கம்) சந்திரகாந்த் சொனாவானே மற்றும் மெல்வி J (உடைகள்) லிபின் மோகனன் (மேக்கப்) மற்றும் LB ஷ்யாம் லால் (புரொடக்சன் கண்ட்ரோலர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

First look poster of Nivin Pauly starrer Mahaveeryar unveiled

தெலுங்கிலும் டப்பிங் பேசும் சூர்யா..; ‘எதற்கும் துணிந்தவன்’ தான்

தெலுங்கிலும் டப்பிங் பேசும் சூர்யா..; ‘எதற்கும் துணிந்தவன்’ தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், திவ்யா துரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தைத் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போது தெலுங்கு டப்பிங் பணிகள் நடந்து வருகிற நிலையில் தமிழைப் போலவே தெலுங்கிலும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் சூர்யா.

தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ள நடிகர்களில் சூர்யா முக்கியமானவர்.

இதுநாள் வரை சூர்யா படத்திற்கு பிரபலமான ஒருவர்தான் தெலுங்கு டப்பிங் பேசி வந்தார்.

தற்போது சூர்யாவே சொந்தக் குரலில் தெலுங்கு டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Suriya dubbed his telugu portions for Etharkkum Thunindhavan

சூட்டிங்கில் மீண்டும் காயம்.; சிகிச்சைக்காக கேரளா செல்லும் விஷால்

சூட்டிங்கில் மீண்டும் காயம்.; சிகிச்சைக்காக கேரளா செல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் ஆக்சன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுப்பவர் நடிகர் விஷால்.

டூப் போட்டு செய்ய வேண்டிய காட்சிகளையும் இவரே செய்துவிடுவார். இதனால் ஏதாவது ஒரு காயம் அல்லது விபத்து ஏற்பட்டுவிடும்.

அண்மையில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ பட சூட்டிங்கில் சமயத்திலும் விஷால் காயப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அடிப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான ரமணா மற்றும் நந்தா என இருவரும் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிவருகின்றனர்.

பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சியை இயக்கியுள்ளார்.

விஷால் கையில் ஒரு குழந்தையுடன் ஓடி செல்ல அவரை வில்லன்கள் துரத்தி வருவதாக காட்சி.

ஒரு கட்டிடத்தில் விஷால் குதிக்கும்போது சுவரில் மோதி கையில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை எடுத்தும் சில நேரங்களில் வலி அதிகமாக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

விஷாலுக்கு உள்காயம் பெரியளவில் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது படக்குழு.

இந்த நிலையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விஷால் கேரளா செல்வதாக அறிவித்துள்ளனர்.

விஷால் முழுவதுமாக குணமாகி வந்த பின்னரே ‘லத்தி’ படப்பிடிப்பை படக்குழு மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal went to Kerala for his treatment

அகிலனாக மாறிய ஜெயம்ரவி..; பிரியா & தன்யா ஆகியோருடன் கூட்டணி

அகிலனாக மாறிய ஜெயம்ரவி..; பிரியா & தன்யா ஆகியோருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிர்ச்சி சிவா நடிக்கும் ‛இடியட், மற்றும் செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படங்களை தயாரித்து வருகிறது ஸ்கிரீன் சீன் நிறுவனம்.

இந்த படங்கள் வெளியீட்டுக்கு ரெடியாகவுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள 3 திரைப்படங்களை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதில் முதல் படத்திற்கு ‘அகிலன்’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணனே இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படம் ஜெயம் ரவியின் 28வது படமாக உருவாகிறது.

பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர்.

சாம் சி எஸ் இசையமைக்க விவேக் ஒளிப்பதிவு செய்கிறார்.

துறைமுகத்தை மையமாகக் கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.

தூத்துக்குடி மற்றும் சென்னை காசிமேட்டில் இதன் பெரும்பாலானா காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

#Jayamravi’s #JR28 titled as #Agilan

‘காமன்மேன்’ டைட்டிலை சுசீந்திரன் உதவியாளருக்கு வழங்கியது சென்சார்

‘காமன்மேன்’ டைட்டிலை சுசீந்திரன் உதவியாளருக்கு வழங்கியது சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.

ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.

டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக AGR RIGHT FILMS தெரிவித்துள்ளது.

தற்போது CHENDUR FILMS INTERNATIONAL “COMMON MAN” என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லவே, சசிகுமார் எதுவானாலும் FILM CHAMBER வழியாக நீங்கள் தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுகவே, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. பதில் வர தாமதமான நிலையில்,

CHENDUR FILMS INTERNATIONAL நிறுவனம் “COMMON MAN” என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.

இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.

AGR RIGHT FILMS “COMMON MAN” என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று Censor Board-இடம் சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியது.

அதற்கு சென்சார் போர்ட் இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் motion poster விரைவில் வெளிவரும். இதனால், அறிவிப்பு வெளியான சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Common Man movie title goes to Suseenthiran assistant

More Articles
Follows