தன்னை இயக்கியவரையே ரசிகர் மன்ற தலைவராக்கிய தனுஷ்

Thiruda Thirudi Director Subramaniyam Siva turn as president for Dhanush Fans Clubதனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா.

இவரை தற்போது தனுஷின் ரசிகர் மன்றத் தலைவராக்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“என் அன்பிற்குரிய ரசிகர் நற்பணிமன்ற தம்பிகளுக்கு வணக்கம்.

உங்களின் அன்பாலும், கடின உழைப்பினாலும் நமது நற்பணிமன்றம் சிறந்த கட்டுகோப்புடன் விளங்கி வருகிறது.

நமது மன்றத்தின் நலன் கருதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமிக்கிறேன்.

இவர்களுக்கு எப்போதும் போல் உங்களின் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்”.

Thiruda Thirudi Director Subramaniyam Siva turn as president for Dhanush Fans Club

Overall Rating : Not available

Latest Post