2.0 வரிசையில் வெளிநாட்டில் நேத்ரா இசையை வெளியிடும் வெங்கடேஷ்

Nethra audio launch happening today in Canadaதமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ. வெங்கடேஷ்.

இதுவரை 22 படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.

மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்.

ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். தயாரிப்பாளர்களை மகிழ்வித்து மகிழும் இயக்குநர்களை கோடம்பாக்கத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வரிசையில் A.வெங்கடேஷ்க்கு நிரந்தரமாக ஒரு இடம் உண்டு.

இந்தப் படமும் ஆக்சன், திரில்லர் கலந்த கதைதான். கூடுதலாக காதலும் சேர்ந்து கொள்ள.

இந்தக் காலத்திய இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. முதன் முறையாக “நேத்ரா” இசை வெளியீட்டு விழா வரும் இன்று டிசம்பர் 2ஆம் தேதி கனடாவில் நடைபெறுகிறது.

அண்மையில் ரஜினியின் 2.0 இசை வெளியீடு துபாய் நாட்டில் நடைபெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nethra audio launch happening today in Canada

Overall Rating : Not available

Latest Post