தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் ரஜினி, ஜாக்கிசரஃப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, அனிருத், கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் இயக்குனர் நெல்சன் மேடை ஏறிப் பேசும்போது…
‘ஜெயிலர்’ படம் என் 4வது திரைப்படம். நான்கு படங்களை இயக்கி விட்டேன் எந்த படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதுதான் என்னுடைய முதல் இசை விழா.
நான் இந்த படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. எனக்கு கிடைத்த வெற்றியில் பாதி வெற்றி அனிருத்துக்கு தான் சேரும். அவரால் தான் இங்கு நிற்கிறேன். அவர்தான் எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.
என்னுடைய கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களை பார்த்து சிவராஜ்குமார் பாராட்டினார். உங்கள் படத்தில் ஏதாவது ஒரு சின்ன வேஷம் என்றாலும் என்னை அழையுங்கள். நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன் என்றார்.
இந்தப் படத்தில் நான் கேட்டதற்காக நிறைய நட்சத்திரங்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கதைக்காக ஒத்துக் கொண்டார்களா என்பது தெரியாது.
ஆனால் ரஜினிக்காக ஒத்துக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் யாருக்காகவும் பயப்பட மாட்டேன். ஆனால் கலாநிதிமாறனுக்கு பயப்படுவேன். நானும் சின்னத்திரையில் இருந்து வந்தவன் தான். அவர்தான் சின்னத்திரையை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்.
எனக்கு மாறன் சாரிடம் கதை சொல்ல கொஞ்சம் பயம்.. பீஸ்டு படத்தின் கதையை சொல்லும் போது கூட விஜய் இடம் இதை சொன்னேன்.
நான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் நிறைய படங்களை செய்ய ஆசைப்படுகிறேன். அவர்களும் இதையே நினைக்க வேண்டும்.
நான் முதன் முதலில் பார்த்த ரஜினி படம் ‘அண்ணாமலை’ படம் தான். அந்த போர்டு மீட்டிங் சிகரெட் பிடிக்கும் காட்சியில் தான் முதன் முதலில் தலைவரை பார்த்தேன்.
எனக்கு முதலில் ரஜினி அவர்களை சந்திக்க நம்பிக்கை வரவில்லை. பயம் இருந்தது. அப்போது விஜய் தான் போய் கதை சொல்லுயா நல்லா இருக்கும் என உற்சாகப்படுத்தி என்னை அனுப்பி வைத்தார்.
ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் நெகட்டிவ் ஆக எதையும் சொல்லவில்லை ரஜினி.
என்னை சூட்டிங் தளத்தில் சார் என்று தான் அழைப்பார் ரஜினி சார்.. நான் என்னை சார் என்று அழைக்க வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனாலும் அப்படித்தான் அழைப்பார். மரியாதை என்ன என்பதை தலைவரிடம் கத்துக்கணும்.”
இவ்வாறு பேசினார் நெல்சன் திலீப்குமார்.
Nelson speaks about Rajini Vijay Anirudh at Jailer Audio launch