‘நீ சுடத்தான் வந்தியா’ கவர்ச்சி பாம் இலக்கியாவுடன் நடித்த ஹீரோவின் அனுபவங்கள்…

‘நீ சுடத்தான் வந்தியா’ கவர்ச்சி பாம் இலக்கியாவுடன் நடித்த ஹீரோவின் அனுபவங்கள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nee Sudathan Vanthiyaடிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.

இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் . ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.

இப்படத்தில் கவர்ச்சி நடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார்
பேசும் போது,…

” சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .

ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும்.

நான் ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

எனக்கு சினிமா மீது காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.

அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன்.

இருந்தாலும் இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. சில நடைமுறைத் தடைகள் இருந்தன. இது சில நாட்களில் சரியாகி விட்டது.

இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.

இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன. இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர்.

அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் ‘எனவே இருவருக்கும் சில தயக்கங்கள், மனத்தடைகள், இருந்தன அது போகப் போக சரியாகி விட்டது.

இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகுகிறது என்பதை அறிந்து கொண்டேன்.

இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம் . முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

இதில் ரெட் ட்ராகன், ஆரி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்” நான் இப்போது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விட்டேன் எனது அடுத்த படத்தின் 5 கதாநாயகிகள் அதில் ஒருவர் இலக்கியா என்பது இப்போதைய உறுதி என்று கூறுகிறார்

Nee Sudathan Vanthiya hero Arun Kumar sharing his working experience with Tik Tok fame Elakkiya

செல்போன் கடை திறக்க வந்த ‘குக் வித் கோமாளி’ நடிகர்..; புதிய கடைக்கு சீல் வைத்தது சுகாதாரத்துறை

செல்போன் கடை திறக்க வந்த ‘குக் வித் கோமாளி’ நடிகர்..; புதிய கடைக்கு சீல் வைத்தது சுகாதாரத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cook with comali pugazh (1)திருநெல்வேலி பகுதியில் புதிய செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்தார் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி நடிகர் புகழ்

இவரை காண ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டனர்.

தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரானா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நிலையில் தான் நடிகர் புகழைக் காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.

இதில் பலரும் மாஸ்க் அணியவில்லை.

மேலும் சமூக இடைவெளியையும் எவரும் பின்பற்றவில்லை.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த கடை பகுதிக்கு வந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா விதிகளை மீறியதாக தெரிவித்து புதிய கடைக்கு சீல் வைத்தனர்.

Cook With Komali fame Pugazh launches new mobile shop

தனுஷின் ‘கர்ணன்’ பட தவறை கண்டித்த உதயநிதி.; சரி செய்ய ஒப்புக்கொண்ட படக்குழு

தனுஷின் ‘கர்ணன்’ பட தவறை கண்டித்த உதயநிதி.; சரி செய்ய ஒப்புக்கொண்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் 9ல் ரிலீசானது.

கொரோனா காலம் என்பதால் படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்காது என சிலர் நினைத்த நிலையில் ‘கர்ணன்’ வசூல் வேட்டையாடி வருகிறான்.

ஏப்ரல் 9 ரிலீஸ் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ 10.20 கோடிகளை வசூலித்துள்ளது. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் உதயநதி படத்தை பார்த்துவிட்டு கூறியுள்ளதாவது….

‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.

நண்பர் @dhanushkraja,அண்ணன் @theVcreations, இயக்குநர்@mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக (ஜெயலலிதா) ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் (திமுக கருணாதிதி) கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது.

இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.

இவ்வாறு உதயதிநி் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi condemns Dhanush Karnan movie mistake

ஏப்ரலில் விஷ்ணு விஷாலுக்கு 2வது திருமணம்..; ஜுவாலாவுக்கு இது எத்தனையாவது..?

ஏப்ரலில் விஷ்ணு விஷாலுக்கு 2வது திருமணம்..; ஜுவாலாவுக்கு இது எத்தனையாவது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது எப்.ஐ.ஆர்., மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ரஜினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2018ல் விவாகரத்து பெற்றனர்.

இதன்பின்னர் பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமானார் விஷ்ணு விஷால்.

காடன் படம் புரொமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்வேன் என அறிவித்தார் விஷ்ணு விஷால்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 22ல் இவர்களது திருமணம் நடைபெறுகிறது என அறிவித்துள்ளார் விஷ்ணு.

ஜுவாலாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்.

இவரின் சக பாட்மின்டன் வீரர் சேட்டன் ஆனந்த்தை 2005ல் திருமணம் செய்து பின் 2011ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்தி் மகிழ்கிறோம்..

Vishal and Jwala Gutta to get married on April 22

அடுத்த கட்டத்திற்கு நகரும் ‘மாநாடு’.; அழகிய தீவில் லொகேஷன் தேடும் படக்குழு.!

அடுத்த கட்டத்திற்கு நகரும் ‘மாநாடு’.; அழகிய தீவில் லொகேஷன் தேடும் படக்குழு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மாநாடு’.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்பட ‘மாநாடு’ காட்சிக்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கினார். அப்போது மண் தரையில் படுத்து சிம்பு ஓய்வு எடுத்த போட்டோ ஒன்றும் வைரலானது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் சற்றுமுன் பகிர்ந்துள்ளதாவது…

‘மாநாடு’ படத்திற்காக லொக்கேசன் தேட ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதனுடன் மாலத்தீவுக்கு செல்கிறோம்.

எனவே விரைவில் சிம்பு & படக்குழுவினர் மாலத்தீவு பறக்கவுள்ளனர்.

Maanadu movie team flyes to Maldives

நடிகர் செந்தில் & குடும்பத்தாருக்கு கொரோனா..; ஒரு வாரமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை

நடிகர் செந்தில் & குடும்பத்தாருக்கு கொரோனா..; ஒரு வாரமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டை விட தற்போது அதிக வீரியமாக உள்ளது.

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் அதனை ஆளும் அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோலிவுட்டின் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து செந்தில் தனது குடும்பத்துடன் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டி வசித்து வருகிறார்.

அவரது மகன் அதே சாலிகிராமம் பகுதியில் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedian Senthil and his family tested Covid19 positive

More Articles
Follows