தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.
அன்று அவர் அறிவித்த போது ஆன்மிக அரசியலை தான் நாடவிருப்பதாக தெரிவித்தார். அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.
ஆன்மீக அரசியல் என்றால்… உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்” என தெரிவித்தார் ரஜினி.
இதனையடுத்து ஜனவரி 1 புத்தாண்டு அன்று மாலை வேளையில் ரஜினிமன்றம் என்ற இணையதளம் பற்றி அறிவித்தார்.
ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும் தங்கள் பெயருடன வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து இணையலாம் என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே பலரும் அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டதால் அந்த இணையதளமே முடங்கியது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Nearly 50 lakhs peoples joined in Rajini Mandram website