4 படங்களில் 3 தோல்வியை கொடுத்த நயன்தாரா; அடுத்தது என்ன?

Nayantharas 3 failure movies in recent timesஎந்த நடிகர் படம் என்றாலும் எந்த வேடம் என்றாலும் தன் கேரக்டரை சரியாக செய்து பேர் வாங்குபவர் நயன்தாரா.

இதனால் இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே அதற்கு தகுந்த மாதிரி இவரும் தன் சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றி தற்போது ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை வாங்குகிறார்.

ஆனால் இந்தாண்டில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மட்டுமே வெற்றியை பெற்றது.

அதன்பின்னர் வெளியான ‘ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம்’ ஆகிய படங்கள் படுதோல்வியை அடைந்துள்ளன.

தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களை பெரிதும் நம்பியிருக்கிறார் நயன்தாரா.

இனிவரும் படங்களில் சம்பளத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Nayantharas 3 failure movies in recent times

Overall Rating : Not available

Latest Post