இரு வேடங்களில் நயன்தாரா கலக்கும் *ஐரா*; யோகிபாபு உடன் கூட்டணி!

இரு வேடங்களில் நயன்தாரா கலக்கும் *ஐரா*; யோகிபாபு உடன் கூட்டணி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

airaa posterரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

“அறம்” படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்” திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.

ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, “அவள்” படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

” நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து “ஐரா” படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.

“ஐரா” என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு horror படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்.

முகத்தில் ரத்தம் வழிய மன்சூர் அலிகானின் 3வது மனைவி போலீசில் புகார்; தாக்கியது 2வது மனைவி

முகத்தில் ரத்தம் வழிய மன்சூர் அலிகானின் 3வது மனைவி போலீசில் புகார்; தாக்கியது 2வது மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khanநடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர்.

இதில் 2வது மனைவி பேபி என்கிறவர் 3வது மனைவியை தாக்கியதாக கூறப்படகிறது.

2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் மற்றும் மகன் மீரான் அலிகான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கி உள்ளனர்.

மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலை மன்சூர் அலிகான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாக சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்டுள்ள 3வது மனைவி வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குடும்பத்தார் மீது புகார் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

கடவுளுக்கு இந்துக்கள் லஞ்சம் கொடுப்பதாக பேசிய எஸ்ஏசி-க்கு முன் ஜாமீன்

கடவுளுக்கு இந்துக்கள் லஞ்சம் கொடுப்பதாக பேசிய எஸ்ஏசி-க்கு முன் ஜாமீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SACதல தளபதி ரசிகர்கள் மோதிக் கொள்ளும் விசிறி திரைப்பட விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துக் கொண்டார்.

இந்த விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

இந்த விழாவில் எஸ்ஏசி பேசும்போது… ‘மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது’ போல விமர்சித்து பேசியிருந்தார்.

இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஓர் இந்து அமைப்பின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட் மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

கூத்தன் படத்தை ரசிப்பவர்களுக்கு ஒரு பவுன் தங்கம் தரும் தயாரிப்பாளர்

கூத்தன் படத்தை ரசிப்பவர்களுக்கு ஒரு பவுன் தங்கம் தரும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

koothanதயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூத்தன்’.

இப்படத்தை ஏ.எல்.வெங்கி எழுதி இயக்க அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்துள்ளனர்.

வருகிற அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதிய முறையில் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன்.

இப்போது படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்து ஆச்சர்யப்படுத்துகிறார்.

இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும்.

அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் பட டிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன்நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன் பெட்டியில் போட வேண்டும்.

தமிழகம் முழுவதும் அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றி விழாவில் ஒவ்வொருவருக்கும் 1 பவுன் தங்கம் வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.

படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகனுக்கு பரிசு அறிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன்.

ஜெய்யின் ஜருகண்டியை நம்பியிருக்கும் தயாரிப்பாளர் நிதின் சத்யா

ஜெய்யின் ஜருகண்டியை நம்பியிருக்கும் தயாரிப்பாளர் நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaiவணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு.

ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

இது குறித்து அவர் கூறும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும்.

முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது…

“இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார்.

படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

மற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும்.

ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர்.

போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.

இந்தியாவின் முதல் மூவி மராத்தான் சிறப்பை பெறும் *காயம்குளம் கொச்சூன்னி*

இந்தியாவின் முதல் மூவி மராத்தான் சிறப்பை பெறும் *காயம்குளம் கொச்சூன்னி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kayamkulam Kochunniகடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘காயம்குளம் கொச்சூன்னி’.

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின் பாலி, மோகன்லால் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட மொத்த குழுவும் கொண்டாட்டத்தின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.

அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டுள்ளது.

ஆம், காயம்குளம் கொச்சூன்னி 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் ‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ என்ற சிறப்பை பெறுகிறது.

இது குறித்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் கூறும்போது…

“ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன்.

நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது.

தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்” என்றார்.

நிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த்தா சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் இதிக்காரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), கோபி சுந்தர் (இசை), பினோத் பிரதான், நிரவ் ஷா மற்றும் சுதீர் பல்சனே ஆகியோர் ஒளிப்பதிவில் இந்த படம் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More Articles
Follows