நயன்தாரா-யோகிபாபு கூட்டணியில் திருநங்கை ஜீவா

நயன்தாரா-யோகிபாபு கூட்டணியில் திருநங்கை ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Transgender Jeeva acting with Nayanthara in Airaaமுதன்முறையாக இரண்டு வேடங்களில் நயன்தாரா நடித்து வரும் படம் ஐரா.

இதில் ஒரு கேரக்டரில் கறுப்பு நிற தோற்றத்தில் நடித்து வருகிறார்.

சர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் இப்பட டீசரில் அந்த கேரக்டர் வெளியானது.

இதில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் கலையரசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் நம்மை கவர்ந்த திருநங்கை ஜீவாவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளராம்.

Transgender Jeeva acting with Nayanthara in Airaa

கமல்ஹாசனின் கடைசி படத்தை இன்று தொடங்கினார் ஷங்கர்

கமல்ஹாசனின் கடைசி படத்தை இன்று தொடங்கினார் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று (ஜனவரி 18) தொடங்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

காஜல் அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே கமல் நடித்து வருகிறார்.

பொள்ளாச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனங்களை எழுதியுள்ளனர்.

இது தான் தனது கமல்ஹாசனின் கடைசி படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதன் பின்னர் கமல் முழு வீச்சில் அரசியல் களத்தில் இறங்குகிறார்.

நதியா நடிக்க மறுத்த ஆபாச கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்

நதியா நடிக்க மறுத்த ஆபாச கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramya krishnanவிஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இதில் விஜய் சேதுபதி அவர்கள் ஷில்பா என்கிற திருநங்கையாக நடிக்கிறார்.

இவருடன் ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

குறிப்பாக ரம்யா கிருஷ்ணன், ஆபாசப் பட நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

அதாவது ‘மல்லு அன்கட்’ என்கிற ஆபாசப் படத்தில் நடிப்பவராக நடிக்கிறாராம்.

இந்த கேரக்டரில் முதலில் நதியாவை நடிக்க அணுகினார்களாம்.

அவர் மறுக்கவே தான் ரம்யா ஓகே சொன்னாராம்.

‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி

‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். திரு. கமலஹாசன் அவர்களும் வருவதாகக் கூறியிருக்கிறார்.

இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார்.

பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம்.

“மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூனாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர்- இசக்கி துரை
எழுத்து மற்றும் இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகாந்த்
இனைத்தயாரிப்பு – சினி இன்னோவேஷன்ஸ்
இனைத்தயாரிப்பாளர் – ஆர்.கே. அஜெய்குமார்
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி
கலை இயக்குநர் – ஜான் பிரிட்டோ
ஸ்டண்ட் – மிரக்கில் மைகேல்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்!

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and mahatதொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மகத்தான வளர்ச்சிக்குப் பின்னர், பொதுவெளிக்கு வரும் எந்த ஒரு பொருளும் மக்களிடையே மிகப்பெரிய விவாதத்துக்கு உள்ளாகிறது. தென்னிந்திய சினிமா துறையை உற்று நோக்கினால், தங்கள் விருப்பமான நடிகரின் எந்த ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியானாலும் அதை ரசிகர்கள் ஃபிரேமுக்கு ஃபிரேம் என்ன உள்ளது என பகுப்பாய்வு செய்து படத்தை பற்றிய தகவல்களை விவாதிக்கிறார்கள். சுவாரஸ்யமாக, இது இயக்குனர்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணியாக அமைகிறது. ஒரு சில நாட்களுக்கு முன், பிக் பாஸ் புகழ் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா” என்ற ரொமாண்டிக் காமெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் நடிகர் மஹத் தீவிரமான STR ரசிகராக நடித்திருக்கிறார். அந்த போஸ்டரில் சிம்புவின் கட் அவுட் இருந்தது. வைரலான அந்த போஸ்டரை ரசிகர்கள் பகுப்பாய்வு செய்ததில், வேறு ஒரு தமிழ் சினிமாவின் போஸ்டர் பின்னணியில் இருந்தது தெரிய வந்தது.

ரசிகர்களிடையே ஒருவித குழப்பம் நிலவும் இந்த நிலையில், படத்தின் இயக்குனர் பிரபு ராம்.சி விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, “இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பல பெரிய படங்களின் ரெஃபரன்ஸ் இருக்கும். இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களை கவரும் “ஸ்பூஃப்” எங்கள் படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் ஒரு சாதாரண போஸ்டரை கொண்டு வந்திருந்தால், எங்கள் தயாரிப்பானது பொங்கல் பெருவிழாவில் தமிழ் சினிமாவுக்கு அளிக்கப்பட்ட இன்னுமொரு பரிசாக மட்டுமே இருந்திருக்கும். இது பார்வையாளர்களுக்கு ஒரு விஷுவல் பொறியாகும். போஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் வசன பகுதிகளுக்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது, ஒரு பாடல் காட்சிப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. இன்னும் 15 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்” என்றார்.

More Articles
Follows